தில்சன் கொலை நிகழ்வு

தில்சன் கொலை நிகழ்வு என்பது சூலை 2011 இல் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு கொலை நிகழ்வு. இதில் சென்னையைச் சேர்ந்த “தில்சன்” என்ற சிறுவன், இராணுவ உயர் அலுவலர் குடியிருப்பொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கிருந்த பாதாம் மரத்தில் காய் பறிக்க தன் நண்பர்களுடன் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி மக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். கொலையாளியைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்நாட்டின் முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்திய ராணுவ தலைமை அதிகாரிகளிடம் இது குறித்து புகாரளித்தார். சில நாட்கள் சர்ச்சைக்குப்பின் தில்சனை கொலை செய்ததற்காக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்சன்_கொலை_நிகழ்வு&oldid=3585576" இலிருந்து மீள்விக்கப்பட்டது