தில்லி நுழைவாயில்

தில்லியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்

தில்லி நுழைவாயில் என்பது வரலாற்றுப் புகழ் மிக்கதும், சாசகானாபாத் எனப்படுவதுமான மதிலால் சூழப்பட்ட தில்லி நகரின் தெற்கு வாயில் ஆகும். இது பழைய தில்லியைப் புதுதில்லியுடன் இணைக்கிறது. தற்போது இது நேதாசி சுபாசு சந்திரபோசு சாலையின் முடிவில், தாரியாகஞ்ச் என்னுமிடத்தில் காணப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந் நுழைவாயில், வடிவமைப்பிலும், கட்டிடக்கலைப் பாணியிலும், 1853 ல் கட்டபட்ட காசுமீரி நுழைவாயில் எனப்படும் வடக்கு நுழைவாயிலை ஒத்தது.

இதற்கு அண்மையிலேயே இன்றைய பகதூர் சா சஃபார் சாலையில், கூனி தர்வாசு (இரத்த வாயில்) உள்ளது. இந்தியக் கிளர்ச்சி 1857 தோல்வியுற்றதை அடுத்து, இங்கு வைத்தே 1857 செப்டெம்பர் 21 ஆம் நாள், பிரித்தானியத் தளபது வில்லியம் ஒட்சன், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபாரின் இரண்டு ஆண்மக்களையும் ஒரு பேரப் பிள்ளையையும் சுட்டுக் கொன்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_நுழைவாயில்&oldid=2245717" இலிருந்து மீள்விக்கப்பட்டது