திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ் (Divya Sathyaraj) ஒரு இந்திய ஊட்டச்சத்து நிபுணராவார் . இவர் நடிகர் சத்யராஜின் மகள் மற்றும் சிபிராஜின் சகோதரி ஆவார். திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்த அட்சய பாத்திரம் அறக்கட்டளை (TAPF), (ஒரு அரசு சாரா நிறுவனம் இந்திய அரசின் இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது) . இவர் 2020 இல் மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார், இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .

திவ்யா சத்யராஜ்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிஊட்டச்சத்து நிபுணர்
பெற்றோர்சத்யராஜ்
மகேஸ்வரி
உறவினர்கள்சிபிராஜ் (அண்ணன்)

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

திவ்யா நடிகர் சத்யராஜ் மற்றும் மகேஸ்வரியின் மகளாவார். திவ்யாவின் சகோதரர் நடிகர் சிபிராஜ் ஆவார்.[1][2]  இவரது தந்தை மற்றும் சகோதரர் போலல்லாமல், திவ்யா நடிப்பிலிருந்து விலகினார், மாறாக ஊட்டச்சத்துக்கான தொழிலைத் தொடர்ந்தார். முதலில் சைவ உணவு உண்பவர், இவர் 2016 ல் நனிசைவம் உணவு உண்பவரானார்.[3]

தொழில் தொகு

திவ்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு, மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை அமர்வுகள் குறித்த பட்டறைகளை நடத்துகிறார். இவர் இந்தியப் பிரதமர் , நரேந்திர மோடிக்கு மருத்துவத் துறையில் தவறான நடத்தை மற்றும் அலட்சியம் சுட்டிக்காட்டி நீட் தேர்வுகள் குறித்து கேள்வி கேட்டு, ஒரு கடிதம் எழுதினார். இவர் அட்சய பாத்திர அறக்கட்டளையின் நல்லெண்ண தூதராக உள்ளார் , உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டம். இவர் வேர்ல்ட் விஷன் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார், அங்கு இவர் நான்கு இளம் பெண்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

திவ்யா 2020 இல் மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார் . இயக்கத்தைப் பற்றி அவர் கூறுகிறார், "நகரத்தின் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத பகுதிகளை அடையாளம் காண்பதே இயக்கத்தின் நோக்கமாகும். பகுதிகள் அடையாளம் காணப்பட்டு சமூக உறுப்பினர்கள் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தேவைப்பட்டால், குறைபாடுகளின் அடிப்படையில், சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு இலவசமாக வழங்கப்படும். "திவ்யா 2021 இல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.[4][5][6] தனது மகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்று சத்யராஜ் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘’என் குழந்தைகள்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும், நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்’’ என்று கூறியிருந்தார்.[7]

விருதுகள் தொகு

திவ்யா 2019 ஆம் ஆண்டில்  பெண்கள் சாதனையாளர் விருது சிறந்த சமூக சேவையில் பெற்றார். இந்த விருது சமூக விழிப்புணர்வைப் பரப்பும் ரெயின்ட்ராப்ஸ் (Raindrops) இளைஞர் சார்ந்த சமூக அமைப்பு ஊடக மற்றும் பொழுதுபோக்கு மூலம் வழங்கப்பட்டது ..[6][8] 2020 ஆம் ஆண்டில் , ஊட்டச்சத்து சிகிச்சை துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக , சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்காவால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது .[9]

மேற்கோள்கள் தொகு

  1. "நடிகர் சத்யராஜ் திருமணம் நடந்தது" [Actor Sathyaraj was married]. மாலை மலர். 23 July 2013. Archived from the original on 28 July 2013. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  2. "Cine Biography: Sathyaraj (Part-2)". தினகரன். Archived from the original on 2 December 2000. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  3. Mathew, Thushara Ann (14 February 2018). "Being vegan has given me a burst of energy: Divya Sathyaraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  4. Balasubramanian, Roshne (6 August 2020). "A diet for the deprived". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  5. "Sathyaraj's daughter divya's press note on her political journey". Behindwoods. 25 October 2020. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  6. 6.0 6.1 "I will get into politic, soon: Divya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 June 2019. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  7. "அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம்... விரைவில் அறிவிப்பேன்!" - திவ்யா சத்யராஜ் விளக்கம்".
  8. "Dr. Divya Sathyaraj". sumanclinic.com. 5 March 2020. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  9. "Divya Sathyaraj to start a political movement?". Behindwoods. 20 June 2020. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_சத்யராஜ்&oldid=3793322" இலிருந்து மீள்விக்கப்பட்டது