திஸ் மீன்ஸ் வார்

திஸ் மீன்ஸ் வார், 2012 ஆம் ஆண்டு வெளியான மெக்ஜியால் இயக்கப்பட்ட, காதல் - நகைச்சுவை - துப்பறியும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், கிறிஸ் பைன் மற்றும் டாம் ஹார்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நண்பர்களான சி.ஐ.ஏ. அதிகாரிகள் இருவர் ஒரே பெண்ணை விரும்புவதால் ஏற்படும் பிணக்குகளை நகைச்சுவையுடன் வழங்கியுள்ளார், மெக்ஜி.

திஸ் மீன்ஸ் வார்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மெக்.ஜி
தயாரிப்புசைமன் கின்பெர்க்
ஜேம்சு லாசிட்டர்
இராபர்ட் சைமன்ஸ்
வில் ஸ்மித்
திரைக்கதைடைமோத்தி டவுலிங்
சைமன் கின்பெர்க்
இசைகிரிஸ்டோப் பெக்
நடிப்புரீஸ் விதர்ஸ்பூன்
கிறிஸ் பைன்
டாம் ஹார்டி
டில் சுவிகர்
செல்சியா ஹான்ட்லர்
ஒளிப்பதிவுரஸ்ஸல் கார்பென்டர்
படத்தொகுப்புநிகோலஸ் டீ டோத்
ஜெஸ்ஸீ ட்ரீபுஸ்க்
கலையகம்வொண்டர்லாண்ட் சவுண்ட் & விசன்
ஓவர்ப்ரூக் எண்டர்டைன்மென்ட்
ராபர்ட் சைமன்ட்ஸ்
விநியோகம்20-த் செஞ்சுரி பாக்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 2012 (2012-02-17)
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$65 மில்லியன் (464.9 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$155.8 மில்லியன் (1,114.2 கோடி)[1]

கதைக் கரு தொகு

சி. ஐ. ஏ. அதிகாரிகளான எப்.டி.ஆரும் (கிரிஸ் பைன்), டக் ஹான்சனும் (டாம் ஹார்டி) நல்ல நண்பர்கள். பன்னாட்டு குற்றவாளியான கார்ல் ஹென்ரிச் (டில் சுவிகர்) மிகப்பெரிய அழிவிற்குத் திட்டமிடுகிறான்.

எளிதில் பெண்களை மயக்கும் எப்.டி.ஆர்., தான் ஒரு கப்பலின் தலைவர் என்றும், டக் தான் ஒரு பயண முகவர் என்றும் வெளி உலகத்திற்கு சொல்கிறார்கள். இணையத்தில் லாரனின்(ரீஸ் விதர்ஸ்பூன்) பெண்ணுடைய விளம்பரத்தினைப் பார்த்து அவருடன் டேட்டிங் செல்கிறார்.

அதே நேரம், எப்.டி.ஆரும் அதே பெண்ணை அவருடைய குணத்தால் கவரப்படுகிறார். இருவரும் ஒரு நாள் தங்களுடைய தோழிகளின் புகைப்படத்தைக் காட்டுவதால் ஒரே பெண்ணை இருவரும் காதலிப்பதை தெரியவருகிறது.

அதன்பிறகு இருவரும் அப்பெண்ணிற்கு பிடித்தவாறு நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். அதனால், லாரனுக்கு யாரைத் திருமணம் செய்வது என்ற குழப்பமும் வருகிறது. பிறகு ஒரு கட்டத்தில், ஹென்ரிச் மூவரையும் கொல்லத் திட்டமிரடுகிறான். எவ்வாறு தப்பிக்கின்றனர், லாரனை யார் கைபிடிக்கிறார் என்பதை, சண்டைக் காட்சிகளுடனும், நகைச்சுவையுடனும் திரைப்படமாக்கியிருக்கின்றனர்.

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

முதலில் சாம் வொர்த்திங்க்டன் தயாரிப்பதாக இருந்த இத்திரைப்பட்ம, டாம் ஹார்டியால் தயாரிக்கப்பட்டது.[2]

வெளியீடு தொகு

திஸ் மீன்ஸ் வார் திரைப்படமானது உலகம் முழுவதும், காதலர் தினமான 2012, பிப்ரவர் 14-ம் திகதி வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்தது பின்னர் 20-த் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் 2012, பிப்ரவரி 17-ம் திகதி வெளியிடப்பட்டது.[3]

டிவிடி வெளியீடு தொகு

டிவிடி என்னும் குறுந்தகுடு 2012, மே மாதம் 22-ம் திகதி வெளியானது.[4]

வருமானம் தொகு

இத்திரைப்படம், வட அமெரிக்காவில் $54,760,791 வருமானமும், பிறநாடுகளில் $101,106,281 ஆக மொத்தம் $155,867,072 வருமானம் ஈட்டியது.[1]

வரவேற்பு தொகு

இத்திரைப்படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றது. ரோட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 158 கருத்துகளின் அடிப்படையில், 25% "ரோட்டன்" குறியீடும், 4.2/10 மதிப்பெண்ணும் பெற்றது.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. 1.0 1.1 "This Means War (2012)". Box Office Mojo. ஐஎம்டிபி. பார்க்கப்பட்ட நாள் சூன் 27, 2012.
  2. "Tom Hardy Replaces Sam Worthington in McG’s This Means War" பரணிடப்பட்டது 2010-10-28 at the வந்தவழி இயந்திரம். திரைப்படம். பார்த்த நாள் அக்டோபர் 13, 2010.
  3. Kilday, Gregg (பிப்ரவரி 7, 2012). "Fox Delays 'This Means War' Opening to Avoid Box Office Face-Off With 'The Vow'". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/this-means-war-release-postponed-reese-witherspoon-chris-pine-287835. பார்த்த நாள்: பிப்ரவரி 19, 2012. 
  4. "This Means War". Complete Season DVDs. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "This Means War". Rotten Tomatoes. Flixster. பார்க்கப்பட்ட நாள் மே 2, 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திஸ்_மீன்ஸ்_வார்&oldid=3606511" இலிருந்து மீள்விக்கப்பட்டது