தி. சாத்தையா

தி. சாத்தையா (T. Sathiah)(பிறப்பு 15 மார்ச் 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான சாத்தையா, வணிக நிர்வாக மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சாத்தையா&oldid=3631385" இலிருந்து மீள்விக்கப்பட்டது