தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்

சாதியத்தை, சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமையை எதிர்க்கும் பரந்துபட்ட அமைப்புக்களின் கூட்டமைப்பாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் 1966-1967 ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் உருவானது. குறிப்பாக பொதுவுடமைவாதிகளும், பொதுவுடமைக் கொள்கைச் சரா ஜனநாயக முற்போக்காளர்களும் ஒருங்கே இனைந்து செயற்படக்கூடிய தளமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.[1] இந்த இயக்கத்தின் முதல் மாநாடு 1967-10-21 அன்று யாழில் நடைபெற்றது. எஸ். ரி. என். நாகரட்ணம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

செயற்பாடுகள் தொகு

  • கோயில், தேநீர்கடை பிரவேசம்
  • எதிர்ப்புப் போராட்டங்கள்
  • ஓவியக் கண்காட்சி
  • கலை இலக்கியச் செயற்பாடுகள்: கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்,
  • அரசியல் செயற்பாடுகள்

விளைவுகள் தொகு

பொது இடங்களில் தீண்டாமையை ஒழிப்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முக்கிய பங்காற்றியது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.
  2. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.