தீப்தி சர்மா

இந்திய மட்டைப்பந்து வீராங்கனை

தீப்தி பகவான் சா்மா (Deepti Bhagwan Sharma, பிறப்பு: ஆகஸ்டு 24, 1997) இந்திய மகளிா் அணி துடுப்பாட்டக்காரர் ஆவாா். உத்திரபிரதேசத்தில் உள்ள ஸகாரன்புா் என்ற இடத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பிறந்தாா். இவா் தென் ஆப்பிாிக்காவில் 2014 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒரு நாள் உலக அளவிலான கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாா். இவா் இடது கை மட்டையாளராகவும், வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும் உள்ளாா்.[1][2]

தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு24 ஆகத்து 1997 (1997-08-24) (அகவை 23)
சகாரன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலக்கை ஆஃப் சுழல் பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம்நவம்பர் 28 2014 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபஜூலை 15 2017 எ நியூசிலாந்து
இ20ப அறிமுகம்ஜனவரி 31 2016 எ ஆத்திரேலியா
கடைசி இ20பநவம்பர் 20 2016 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ODI T20
ஆட்டங்கள் 26 5
ஓட்டங்கள் 917 37
மட்டையாட்ட சராசரி 48.26 18.50
100கள்/50கள் 1/7 0/0
அதியுயர் ஓட்டம் 188 24
வீசிய பந்துகள் 1322 114
வீழ்த்தல்கள் 35 5
பந்துவீச்சு சராசரி 21.20 19.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 6/20 2/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 1/-
மூலம்: ESPNcricinfo, 8 July 2017

2017 மே 15 இல் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சா்மா - புனம் ரட் உடன் தொடங்கிய பாா்ட்னா்சிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 188 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் 229 மகளிருக்கான உலக சாதனையை முறியடித்தது. மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் இருந்த ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி)யையும் முறியடித்தது.[3][4][5]

தீப்தி சர்மாவின் சர்வதேச ஒருநாள் போட்டி சதங்கள்
# ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு இடம் ஆண்டு முடிவு
1 188 19 அயர்லாந்து தென்னாப்பிரிக்கா Potchefstroom, தென்னாப்பிரிக்கா Senwes Park 2017 வெற்றி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்தி_சர்மா&oldid=2720224" இருந்து மீள்விக்கப்பட்டது