தீர்த்த யாத்திரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தீர்த்த யாத்திரை அல்லது தீர்த்தமாடுதல் , இந்து தருமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி, திரிவேணி சங்கமம், சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்திரை, காவேரி போன்ற புனித ஆறுகளிலும்; இராமேஸ்வரம், சோமநாதபுரம், துவாரகை போன்ற ஆலயங்களின் அருகே அமைந்த புனித நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதே தீர்த்த யாத்திரை அல்லது தீர்த்தமாடுதல் என்பர்.
புனித நீர் நிலைகளில் நீராடுவதால் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த தீய பாவங்கள் விலகும் என்பது இந்து சமய மக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
இந்து தருமத்தில், புனித நீர் நிலைகளில் நீத்தார் வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
மகாபாரதக் குறிப்புகள்
தொகுமகாபாரத காவியத்தில், சபா பருவத்தில், பாண்டவர்களில் ஒருவரான அருச்சுனன், 12-ஆண்டு கால தீர்த்த யாத்திரையின் போது, பரத கண்டத்தில் உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி, தான் செய்த பாவச் செயலிருந்து விலகினான் எனக் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில்
தொகுதீர்த்தமாடுதல் குறித்து, தீது நீங்கக் கடலாடியும், மாசுபோகப் புனலாடியும் எனவரும் பட்டினப் பாலை அடிகளால் அறியலாம்.
மேற்கோள்கள்
தொகு