துக்ளக் வம்சம்

தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு (ஆட்சி. 1320-1413)


துக்ளக் அரசமரபு (ஆங்கிலம்: Tughlaq dynasty; பாரசீக மொழி: تغلق شاهیان‎) என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும்.[8] தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.[1][9]

துக்ளக் அரசமரபு
(தில்லி சுல்தானகம்)
1320–1413[1]
கொடி of துக்ளக் அரசமரபு
சம கால கற்றலான் நிலப்படத்தின் (அண். பொ. ஊ. 1375) படி துக்ளக் அரசமரபின் கொடி.[2][3][4]
தில்லி சுல்தானகத்தின் துக்ளக் அரசமரபின் கீழ் நிலப் பரப்பு, ஆண்டு பொ. ஊ. 1330-1335. பொ. ஊ. 1335க்குப் பின் பேரரசானது சுருங்க ஆரம்பித்தது.[5][6]
தில்லி சுல்தானகத்தின் துக்ளக் அரசமரபின் கீழ் நிலப் பரப்பு, ஆண்டு பொ. ஊ. 1330-1335. பொ. ஊ. 1335க்குப் பின் பேரரசானது சுருங்க ஆரம்பித்தது.[5][6]
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அதிகாரப்பூர்வ மொழி)[7]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்சுல்தான்
சுல்தான் 
• 1320–1325
கியாதல்தீன் துக்ளக்
• 1325–1351
முகம்மது பின் துக்ளக்
• 1351–1388
பிரூசு ஷா துக்ளக்
• 1388–1413
கியாதுத்தீன் துக்ளக் ஷா / அபு பக்கர் ஷா / முகம்மது ஷா / மகுமூது துக்ளக் / நுசுரத் ஷா
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
1320
• முடிவு
1413[1]
நாணயம்தாகா
முந்தையது
பின்னையது
கில்ஜி வம்சம்
சையிது வம்சம்
வங்காள சுல்தானகம்
விஜயநகரப் பேரரசு
பாமினி சுல்தானகம்
மால்வா சுல்தானகம்
காந்தேசு சுல்தானகம்
குசராத்து சுல்தானகம்
ஜான்பூர் சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்இந்தியா
நேபாளம்
பாக்கித்தான்
வங்காளதேசம்

முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330 மற்றும் 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்த குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது.[5][10]

பூர்வீகம் தொகு

துக்ளக் அரசமரபானது துருக்கிய-மங்கோலிய[11] அல்லது துருக்கிய[12] பூர்வீகத்தை கொண்டிருந்தது. துக்ளக் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்பது தெளிவாக தெரியவில்லை. குத்லுக் என்ற துருக்கிய சொல்லின் இந்திய வடிவம் துக்ளக் என 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான பெரிஷ்தா குறிப்பிடுகிறார். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.[13][14] இலக்கிய, நாணய மற்றும் கல்வெட்டு சான்றுகள் துக்ளக் என்பது மூதாதையர் கொண்டிருந்த பட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த அரசமரபைத் தோற்றுவித்த காசி மாலிக்கின் தனிப்பட்ட பெயராக துக்ளக் இருந்தது. இணக்கமானதாக இருப்பதற்காக துக்ளக் என்ற சொல்லை ஒட்டு மொத்த அரசமரபையும் குறிக்க வரலாற்றாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த அரசமரபை துக்ளக் அரசமரபு என்று அழைப்பது துல்லியமற்றதாக உள்ளது. ஏனெனில் இந்த அரசமரபின் மன்னர்களில் ஒருவர் கூட துக்ளக் என்ற பெயரை தங்களது பெயருடன் பயன்படுத்தவில்லை. கியாதல்தீனின் மகனான முகம்மது பின் துக்ளக் மட்டும் தன்னை துக்ளக் ஷாவின் மகன் ("பின் துக்ளக்") என்று அழைத்துக் கொண்டார்.[13][15]

இந்த அரசமரபின் பூர்வீகமானத்து நவீன வரலாற்றாளர்கள் மத்தியில் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஏனெனில் ஆரம்ப கால நூல்கள் இந்த அரசமரபு குறித்து வேறுபட்ட தகவல்களை கொடுக்கின்றன. துக்ளக்கின் அரசவை கவிஞரான பத்திரி சச், பக்ரம் குர் என்ற மன்னரின் வழித்தோன்றல் வழியாக இந்த அரசமரபுக்கு ஒரு சாசானிய மரபை கொடுப்பதற்காக முயற்சித்துள்ளார். மரபின் மீதான சுல்தானின் அதிகாரப்பூர்வ நிலையாகவும் இது தோன்றுகிறது.[16] எனினும் இது புகழ்வதற்காக கூறப்பட்டது என்று நிராகரிக்கவும் படலாம்.[17]

வரலாற்றாளர் பேதுரு சாக்சன் துக்ளக் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர் என்றும், அலகு என்ற மங்கோலிய தலைவனின் ஓர் ஆதரவாளராக இவர் இருந்தார் என்று பரிந்துரைக்கிறார்.[18] சூபி துறவி ருக்னே ஆலம் துருக்கியர்களின் "கரவுனா" (நெகுதரி) பழங்குடியினத்தை சேர்ந்தவராக துக்ளக் இருந்தார் என்று கோரியதாக மொராக்கோ நாட்டு பயணியான இப்னு பதூதா குறிப்பிடுகிறார். துருக்கிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்துக்கு இடைப்பட்ட மலைப் பாங்கான பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர். இவர்கள் உண்மையில் மங்கோலியர்கள் ஆவர்.[19]

ஆட்சிக்கு வருதல் தொகு

 
தில்லி சுல்தான் (மேல், கொடி:  ) மற்றும் கொல்லம் நகரத்தின் "கொழும்பு மன்னர்" (கீழ், கொடி:  , தொடக்க கால திருத்தூதர் தோமையரின் கிறித்தவம் மற்றும் 1329ஆம் ஆண்டு முதல் சோர்தானசிற்குக் கீழான கத்தோலிக்க தூதுக் குழு காரணமாக இவர் கிறித்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார்). இப்படம் 1375ஆம் ஆண்டின் சம கால கற்றலான் நிலப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[20] இப்படத்தில் உள்ள குறிப்புகள் தகவல்களைக் கொடுக்கின்றன.[21] பல்வேறு இடங்களின் பெயர்கள் துல்லியமானவையாகவும் உள்ளன.[22]

1320ஆம் ஆண்டுக்கு முன்னர் தில்லி சுல்தானகத்தை கல்சி அரசமரபானது ஆண்டது.[23] அதன் கடைசி ஆட்சியாளரான குஸ்ரோ கான் இந்து மதத்தைச் சேர்ந்த ஓர் அடிமையாவார். அவர் கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டிருந்தார். பிறகு சில காலத்திற்கு தில்லி சுல்தானகத்தின் இராணுவத்திற்கு தளபதியாக சேவையாற்றினார்.[24] சுல்தானகத்தை விரிவாக்குவதற்கும், இந்தியாவின் முஸ்லிம் அல்லாத இராச்சியங்களை சூறையாடுவதற்கும் அலாவுதீன் கல்சிக்காக குஸ்ரோ கானும், மாலிக் கபூரும் ஏராளமான இராணுவப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கினர்.[25][26]

1316இல் உடல் நலக்குறைவால் அலாவுதீன் கல்சி இறந்ததற்குப் பிறகு ஒரு தொடர்ச்சியான அரண்மனை கைதுகள் மற்றும் அரசியல் கொலைகள் தொடர்ந்தன.[27] அலாவுதீன் கல்சியின் மகனான முபாரக் கல்சியை கொன்று, கல்சி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கொலை செய்த ஒரு படுகொலையை தொடங்கி மற்றும் இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மதம் மாறியதற்குப் பிறகு சூன் 1320இல் குஸ்ரோ கான் ஆட்சிக்கு வந்தார்.[23] எனினும் தில்லி சுல்தானகத்தின் முஸ்லிம் உயர்குடியினரின் ஆதரவை இவர் பெற்றிருக்கவில்லை. தில்லி உயர் குடியினர் கல்சிக்களின் கீழ் பஞ்சாபின் ஆளுநராக இருந்த காசி மாலிக்கை தில்லியில் ஒரு ஆட்சி கவிழ்ப்புக்கு தலைமை தாங்குமாறும், குஸ்ரோ கானை பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்காகவும் அழைத்தனர். 1320இல் கோகர் பழங்குடியினத்தவரின் ஓர் இராணுவத்தை பயன்படுத்தி காசி மாலிக் ஒரு தாக்குதலைத் தொடங்கினார். குஸ்ரோ கானை கொன்று ஆட்சிக்கு வந்தார்.[10][28]

வரலாறு தொகு

கியாசுதீன் துக்ளக் தொகு

ஆட்சியை பெற்றதற்கு பிறகு காசி மாலிக் தன்னுடைய பெயரை கியாசுதீன் துக்ளக் என்று மாற்றிக் கொண்டார். இவ்வாறாக துக்ளக் அரசமரபை பெயரிட்டு தொடங்கினார்[29]. தனக்கு சேவையாற்றிய மற்றும் தான் ஆட்சிக்கு வருவதற்கு உதவி புரிந்த கல்சி அரசமரபின் அனைத்து மாலிக்குகள், அமீர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இவர் சன்மானம் வழங்கினார். தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த குஸ்ரோ கானுக்கு சேவையாற்றியவர்களுக்கு தண்டனை கொடுத்தார்.[29] தில்லிக்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் இவர் ஒரு நகரத்தை கட்டினார். மங்கோலிய தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக தான் கருதிய ஒரு கோட்டையை இவர் கட்டினார். இக்கோட்டையை இவர் துக்ளக்காபாத் என்று அழைத்தார்.[25]

 
துக்ளகாபாத் என்ற ஒரு நகரத்தைக் கட்ட கியாசுதீன் துக்ளக் ஆணையிட்டார். தில்லிக்கு அருகில் ஒரு கோட்டையுடன் அமைந்த இடமாக இந்த நகரம் திகழ்கிறது. மங்கோலிய தாக்குதலில் இருந்து தில்லி சுல்தானகத்தை காப்பாற்றுவதற்காக இவர் இதைக் கட்டினார். மேற்புறம் துக்ளக் கோட்டையானது உள்ளது. இது தற்போது சிதிலமடைந்து உள்ளது.[25]

1321இல் பிற்காலத்தில் முகம்மது பின் துக்ளக் என்று அறியப்பட்ட இவரது மூத்த மகன் செளனா கானை தற்போதைய தெலங்காணாவின் பகுதிகளாக இருந்த இந்திய இராச்சியங்களான வாரங்கல் மற்றும் திலங்கை சூறையாடுவதற்காக தியோகிருக்கு அனுப்பினார். இவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.[30] நான்கு மாதங்கள் கழித்து வாரங்கல் மற்றும் திலங் ஆகிய பகுதிகளை சூறையாடுவதற்கு மீண்டும் முயலுமாறு தனது மகனிடம் கேட்பதற்காக பெரிய வலுவூட்டல் இராணுவத்தை கியாசுதீன் துக்ளக் அனுப்பினார்.[31] இந்த முறை செளனா கான் வெற்றியடைந்தார். வாரங்கல் வீழ்ந்தது. அதன் பெயர் சுல்தான்பூர் என்றும் மாற்றப்பட்டது. அனைத்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வம், அரச கருவூலம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பிடிக்கப்பட்ட இராச்சியத்திலிருந்து தில்லி சுல்தானகத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.

 
திர்குத் நகரை கைப்பற்றுவதற்காக தனது துருப்புங்களுக்கு தலைமை தாங்கும் கியாதல்தீன் துக்ளக். துக்ளக் அரசவையின் ஓர் உறுப்பினரான இக்திசானி தபீரின் நூலான பசதின் அல் உன்சுவில் இப்படம் காணப்படுகிறது. 1326ஆம் ஆண்டு துக்ளக் அரசமரபின் தொலைந்து போன அசலை அடிப்படையாக கொண்டு அண். 1410ஆம் ஆண்டின் சலயிர் அரசமரபின் ஒரு பிரதியிலிருந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது இஸ்தான்புல் தோப்கபி அரண்மனை அருங்காட்சியக நூலகத்தில் உள்ளது.[32]

வங்காளத்தின் லக்னௌதியில் இருந்த இஸ்லாமிய உயர் குடியினர் இவரது ஆட்சிக் கவிழ்ப்பை தங்களது பகுதிக்கும் நீட்டிக்குமாறு கியாசுதீன் துக்ளக்கிடம் அழைப்பு விடுத்தனர். சம்சுத்தீன் பிரோசு ஷாவை தாக்கியதன் மூலம் கிழக்கே வங்காளத்திற்குள் விரிவாக்குமாறு அழைத்தனர். இதை இவர் பொ. ஊ. 1324-1325இல் நடத்தினார்.[30] தன்னுடைய மகன் உலுக் கானுக்கு கீழ் தில்லியின் கட்டுப்பாட்டை கொடுத்ததற்குப் பிறகு, லக்னௌதிக்கு ஓர் இராணுவத்திற்கு தலைமை தாங்கி இவர் சென்றார். இப்படையெடுப்பில் கியாசுதீன் துக்ளக் வெற்றி அடைந்தார். இவரும், இவரது விருப்பத்திற்குரிய மகனுமான மகுமூது கானும் லக்னௌதியிலிருந்து தில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அடித் தளமின்றி, சரியக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஒரு மர கட்டடத்திற்குள் இவர்களை கொல்வதற்காக கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகனான செளனா கான் திட்டமிட்டார். இதன் மூலம் அதை ஒரு விபத்தாக காட்ட அவர் முயற்சித்தார். தான் திரும்பி வந்ததற்கு பிறகு தில்லியிலிருந்து சூபி போதனையாளர் மற்றும் சௌனா கான் ஆகியோரை கியாசுதீன் துக்ளக் நீக்குவதற்கு முடிவு செய்துள்ளார் என தூதர்கள் மூலம் அவர்கள் அறிந்தனர் என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.[33] கியாசுதீன் துக்ளக்கும், மகுமூது கானும் பொ. ஊ. 1325இல் அந்த மர கட்டடம் வீழ்ந்த போது உள்ளேயே இருந்தனர். அதை இவரது மூத்த மகன் செளனா கண்டு கொண்டிருந்தார்.[34] துக்ளக் அரசமரபின் ஒரு அதிகாரப்பூர்வ வரலாற்றாளர் இவரது இறப்பு குறித்து மற்றொரு கதையை கூறுகிறார். அந்த மரக் கட்டடத்தின் மீது இடி மின்னல் தாக்கியதால் அது சரிந்தது என்று குறிப்பிடுகிறார்.[35] மற்றொரு அதிகாரப்பூர்வ வரலாற்றாளரான அல் பதவுனி அப்தல் காதிர் இப்னு முலுக் ஷா இடி மின்னல் அல்லது கால நிலை குறித்து எந்த வித குறிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் கட்டடம் சரிந்ததற்கு யானைகள் ஓடியதை காரணமாக குறிப்பிடுகிறார். இந்த விபத்தானது முன்னரே திட்டமிடப்பட்டது என்ற வதந்தி குறித்து ஒரு குறிப்பையும் அல் பதவுனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[30]

தந்தைக் கொலை தொகு

 
முகம்மது பின் துக்ளக்கின் தங்க நாணயம். பொ. ஊ. 1325-1351.

இப்னு பதூதா, அல் சபாதி, இசாமி[5] மற்றும் வின்சென்ட் இசுமித்[36] போன்ற பல வரலாற்றாளர்களின் கூற்றுப்படி கியாசுதீன் தன் மகன் உள்ள சுனா கானால் பொ. ஊ. 1325இல் கொல்லப்பட்டார். சுனா கான் அரியணைக்கு முகம்மது பின் துக்ளக் என்ற பெயருடன் வந்தார். 26 ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்தார்.[37]

முகம்மது பின் துக்ளக் தொகு

 
1320 (அடர் பச்சை) முதல் 1330 வரை தில்லி சுல்தானகத்தின் விரிவடைதலை காட்டும் ஒரு வரைபடம். முகம்மது பின் துக்ளக்கின் கீழ் புதிய தற்காலிக தலைநகரத்தின் அமைவிடத்தையும் இந்த வரைபடம் காட்டுகிறது.

முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின்போது தில்லி சுல்தானகமானது பெரும்பாலான இந்திய துணைக்கண்டம் முழுவதும் தற்காலிகமாக விரிவடைந்தது. புவியியல் ரீதியாக அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது.[38] மால்வா, குசராத்து, மகரத்தா, திலங், கம்பிலா, துர் சமுந்தர், மாபார் (மதுரை), லக்னௌதி, சித்தாகோங், சுனர்கன்வா மற்றும் திர்குத் ஆகிய இடங்களை இவர் தாக்கி சூறையாடினார்.[39] இராச்சியங்கள் மீதான ஒவ்வொரு ஊடுருவலும், தாக்குதலும் புதிதாக சூறையாடப்பட்ட செல்வம் மற்றும் கைது செய்யப்பட்ட மக்களிடமிருந்து பிணையத் தொகையை பெற்றுத் தந்த போதிலும், இவரது தொலைதூரப் படையெடுப்புகள் மிகுந்த செலவை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன. விரிவடைந்திருந்த பேரரசானது கைவசம் வைத்துக் கொள்வதற்கு கடினமானதாக இருந்தது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் கிளர்ச்சிகள் வாடிக்கையாகி போயின.[40]

மக்கள் எந்தவித வரியையும் செலுத்த மறுத்த இடங்களில் இவர் வரியை அதிகப்படுத்தினார். கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடைப்பட்ட இந்தியாவின் செழிப்பான நிலங்களில் நில வரியை சில மாவட்டங்களில் 10 மடங்காகவும், மற்ற மாவட்டங்களில் 20 மடங்காகவும் சுல்தான் அதிகரித்தார்.[41] நில வரிகளுடன் மக்கள் தாங்கள் விளைவித்த பயிர்களில் பாதியையோ அல்லது அதற்கு மேலான அளவையோ பயிர் வரியாக செலுத்த வேண்டி இருந்தது. இந்த கூர்மையான அதிகரிக்கப்பட்ட பயிர் மற்றும் நில வரிகள விவசாயிகளைக் கொண்டிருந்த ஒட்டுமொத்த கிராமங்களும் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு இட்டுச்சென்றது. அவர்கள் வனங்களுக்கு தப்பி ஓடினர். எதையும் பயிரிடவோ அல்லது வேலையே செய்ய இயலாது என்று மறுத்தனர். பெரும்பாலானவர்கள் கொள்ளைக்கார இனங்களாக மாறினர்.[41] பஞ்சங்கள் தொடர்ந்தன. இதற்கு சுல்தான் கசப்புணர்வையே எதிர்வினையாக ஆற்றினார். கைதுகள், சித்திரவதைகள் மற்றும் ஒட்டுமொத்த தண்டனைகளை விரிவாக்கினார். "களைகளை வெட்டுவது" போல் மக்களை கொன்றார்.[40]

தில்லி சுல்தானகத்தின் இரண்டாவது நிர்வாக தலைநகரமாக தற்கால மகாராட்டிரத்தின் தேவகிரி நகரத்தை முகம்மது பின் துக்ளக் தேர்ந்தெடுத்தார். இந்நகரத்தின் பெயரை தௌலதாபாத் என்று மாற்றினார்.[42] தன்னுடைய அரச குடும்பத்தினர் மற்றும் உயர் குடியினர் உள்ளிட்ட தில்லியின் மக்கள் தொகையை தௌலதாபாத்தில் குடியமர வைக்க ஒரு கட்டாய இடம் பெயர்தலுக்கு இவர் ஆணையிட்டார். ஒட்டு மொத்த உயர்குடியினரையும் தௌலதாபாத்திற்கு இடம் மாற்றிய முதல் காரணமானது தன்னுடைய உலகை வெல்லும் குறிக்கோளில் அவர்களை ஈடுபடுத்துவதாகும். பேரரசின் பகட்டாரவார நடைக்கு சமய குறியீடுகளை இவர்கள் பின்பற்றுவார்கள் என இவர்களின் பங்கை பரப்புரையாளர்களாக இவர் கண்டார்.[43] தௌலதாபாத்திற்கு இடம் பெயர மறுத்த உயர்குடியினரை துக்ளக் குரூரமாக தண்டித்தார். தன்னுடைய ஆணையை பின்பற்றி நடக்காததை கிளர்ச்சிக்கு சமமானதாக கருதினார். பெரிஷ்தாவின் கூற்றுப்படி மங்கோலியர்கள் பஞ்சாபுக்கு வந்தபோது தில்லிக்கு உயர் குடியினரை சுல்தான் மீண்டும் திரும்ப அனுப்பினார். எனினும் தௌலதாபாத் ஒரு நிர்வாக மையமாக தொடர்ந்தது.[44] தௌலதாபாத்திற்கு உயர்குடியினரை இடம் மாற்றியதன் ஒரு விளைவானது சுல்தானுக்கு எதிராக உயர்குடியினர் கொண்ட வெறுப்பு ஆகும். இது அவர்களின் மனதில் நீண்ட காலத்திற்கு இருந்தது.[45] ஒரு நிலையான உயர்குடியினரை இவர் உருவாக்க முடிந்தது மற்றொரு விளைவாகும். தில்லிக்கு திரும்பி வராத தௌலதாபாத்தின் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதன் விளைவாக நடந்தது.[38] விஜயநகரத்திற்கு சவால் விடுத்த பாமினி இராச்சியத்தின் வளர்ச்சி இந்நிகழ்வுகளின்றி சாத்தியமாயிருக்காது.[46] இவர்கள் உருது மொழியை பேசிய ஒரு வட இந்திய சமூகம் ஆவர்.[47] தக்காணப் பகுதியில் முகம்மது பின் துக்ளக்கின் செயல்கள் இந்து மற்றும் சைன கோயில்கள் சேதப்படுத்தி அமைக்கப்பட்டதையும் குறித்தது. எடுத்துக்காட்டாக சுயம்பு சிவன் கோயில் மற்றும் ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[48]

 
பொ. ஊ. 1330இல் வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக தன்னுடைய பித்தளை நாணயங்களை புழக்கத்தில் விட முகம்மது பின் துக்ளக் ஆணையிடுகிறார்
 
பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்த முகம்மது பின் துக்ளக்கின் ஓர் அடிப்படை உலோக நாணயம்.

முகம்மது பின் துக்ளக்கிற்கு எதிரான கிளர்ச்சிகள் 1327இல் தொடங்கின. இவரது ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்ந்தன. குறிப்பாக 1335க்கு பிறகு சுல்தானகத்தின் புவியியல் விரிவானது காலப்போக்கில் சுருங்கியது. வட இந்தியாவின் கைத்தலைச் சேர்ந்த ஒரு வீரரான சலாலுதீன் அசன் கான் தென்னிந்தியாவில் மதுரை சுல்தானகத்தை நிறுவினார்.[49][50][51] தில்லி சுல்தானகத்திலிருந்து வந்த தாக்குதல்களுக்கு ஒரு நேரடி பதிலாக தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு உருவானது.[52] தில்லி சுல்தானகத்திடம் இருந்து தென் இந்தியாவை விஜயநகரப் பேரரசு விடுதலை செய்தது.[53] 1336இல் முசுனூரி நாயக்கர்களின் கபய நாயக்கர் துக்ளக் இராணுவத்தை தோற்கடித்தார். தில்லி சுல்தானாகத்திடம் இருந்து வாரங்கலை மீண்டும் வென்றார்.[54] 1338இல் இவரது சொந்த உடன்பிறப்பின் மகன் மால்வாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவரை இவர் தாக்கி, பிடித்துக் கொன்றார்.[41] 1339 வாக்கில் உள்ளூர் ஆளுநர்களுக்கு கீழான கிழக்குப் பகுதிகள் மற்றும மன்னர்களால் தலைமை தாங்கப்பட்ட தெற்குப் பகுதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. தில்லி சுல்தானகத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தன. சுருங்கி கொண்டிருந்த தனது இராச்சியத்திற்கு எதிர்வினை ஆற்றி ஆதரவு அளிக்க போதிய வளங்களை முகம்மது பின் துக்ளக் கொண்டிருக்கவில்லை.[55] 1347 வாக்கில் ஓர் ஆப்கானியரான இசுமாயில் முக்கின் கீழ் தக்காணமானது கிளர்ச்சியில் ஈடுபட்டது.[56] இருந்த போதிலும் இவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஆட்சி செய்வதில் இவருக்கு ஆர்வமில்லை. இதன் விளைவாக மற்றொரு ஆப்கானியரான சாபர் கானுக்கு இடம் அளிப்பதற்காக இவர் பதவியில் இருந்து விலகினார். சாபர் கான் பாமினி சுல்தானகத்தின் நிறுவனர் ஆவார்.[57][58][59] இதன் விளைவாக தக்காணப்பகுதியானது ஒரு சுதந்திரமான மற்றும் போட்டியிட்ட இராச்சியமாக உருவானது.[60][61][62][63][64]

முகம்மது பின் துக்ளக் சிந்தனை இன்பத்தில் நாட்டமுடைய ஒருவராவார்.[40] இவர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் மந்திரிகள் மீது ஆழ்ந்த சந்தேகத்தை கொண்டிருந்தார். தன்னுடைய எதிரிகளுக்கு எதிராக மட்டுமீறிய கடுமைத்தன்மையுடன் நடந்து கொண்டார். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான முடிவுகளை இவர் எடுத்தார். எடுத்துக்காட்டாக பேரரசை விரிவாக்குவதற்கான இவரது மிகுந்த செலவினத்தை ஏற்படுத்திய படையெடுப்புகளுக்கு பிறகு மதிப்பு மிக்க உலோக நாணயங்கள் இன்றி இவரது அரச கருவூலமானது காலியானது. வெள்ளி நாணயங்களின் மதிப்புடைய நாணயங்களை அடிப்படை உலோகங்களில் இருந்து அச்சிட இவர் ஆணையிட்டார். தங்களது வீடுகளில் இருந்த அடிப்படை உலோகங்களில் இருந்து போலி நாணயங்களை பொது மக்கள் அச்சிட ஆரம்பித்ததால் இவரது இந்த முடிவு தோல்வியில் முடிந்தது.[36][38]

முகம்மது பின் துக்ளக்கின் அரசவையைச் சேர்ந்த ஒரு வரலாற்றாளரான சியாவுதீன் பரணி மக்களின் வீடுகள் நாணயம் அச்சிடும் இடங்களாக மாறின என்றும், மாகாணங்களின் மக்கள் கோடிகள் மதிப்புடைய போலி தாமிர நாணயங்களை திறை மற்றும் தங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை செலுத்துவதற்கு தயாரித்தனர் என்று எழுதியுள்ளார்.[65] முகம்மது பின் துக்ளக்கின் பொருளாதார சோதனைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு நீடித்த நீண்ட கால பஞ்சமானது இதைத் தொடர்ந்து வந்தது. கிராமப்புற பகுதிகளில் இருந்த ஏராளமான மக்களை கொன்றது.[36] அடிப்படை உலோக நாணய சோதனைக்கு பின் வந்த ஆண்டுகளில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது கடுமையான பஞ்சங்கள் தில்லி மற்றும் பெரும்பாலான இந்தியா முழுவதும் ஏற்பட்டன என்று வரலாற்றாளர் வால்போர்டு குறிப்பிட்டுள்ளார்.[66][67] வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக பித்தளை மற்றும் தாமிர நாணயங்களை பயன்படுத்த துக்ளக் அறிமுகப்படுத்தினார். போலி நாணயங்கள் அச்சிடுவதை இது எளிதாக்கியது. கருவூலத்திற்கு சேதத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்தது. மேலும் மக்கள் தங்களுடைய தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை புதிய பித்தளை மற்றும் தாமிர நாணயங்களுக்கு பதிலாக வாங்கிக் கொள்ள மறுத்தனர்.[68] இறுதியாக இத்தகைய அடிப்படை உலோக நாணயங்களில் பெரும்பாலானவற்றை சுல்தான் திரும்பப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது, "துக்ளகாபாத்தின் சுவர்களுக்குள் நாணய மலைகள் சேரும் வரை பெரும் செலவீனத்துடன் உண்மையான மற்றும் போலி நாணயங்கள் ஆகிய இரண்டையுமே இவர் திரும்ப பெற வேண்டியிருந்தது".[69]

குராசான், ஈராக் (பாபிலோன் மற்றும் பாரசீகம்) மற்றும் சீனா ஆகிய பகுதிகளை தாக்குவதற்கு முகம்மது பின் துக்ளக் திட்டமிட்டார்.[70] குராசான் தாக்குதலுக்காக தில்லிக்கு அருகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குதிரைப்படையினர் சேர்க்கப்பட்டனர். ஓர் ஆண்டுக்கு அரச கருவூலத்தில் இருந்து அவர்களுக்கான செலவினங்கள் செலுத்தப்பட்டன. குராசானை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஒற்றர்கள் அந்த நிலங்களை எவ்வாறு தாக்குவது மற்றும் அடிபணிய வைப்பது என்ற தகவலுக்காக சன்மானங்களைப் பெற்றனர். எனினும் இரண்டாமாண்டு ஆயத்தங்களின் போது பாரசீக நிலங்கள் மீது தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய துணைக் கண்டத்தில் இவர் சூறையாடிய பொருட்கள் காலியாகின. பெரிய ராணுவத்திற்கு ஆதரவளிக்க இயலாதவையாக மாகாணங்கள் ஏழ்மை நிலையில் இருந்தன. சம்பளமின்றி இவருக்கு சேவையாற்ற வீரர்கள் மறுத்தனர். சீனா மீதான தாக்குதலுக்கு முகம்மது பின் துக்ளக் 1,00,000 வீரர்களை இமயமலையை தாண்டி இவளது ராணுவத்தின் ஒரு பகுதியாக அனுப்பினார்.[41] எனினும் இமயமலை வழியான கணவாய்களை இவரது எதிரிகள் மூடினர். பின்வாங்கும் வழியையும் அடைத்தனர். கங்கிராவின் இரண்டாம் பிருத்வி சந்த் முகம்மது பின் துக்ளக்கின் ராணுவத்தை தோற்கடித்தார். மலைப்பாங்கான பகுதியில் இவரது ராணுவத்தால் சண்டையிட இயலவில்லை. 1333ஆம் ஆண்டு இவரது கிட்டத்தட்ட 1,00,000 போர் வீரர்களும் இறந்தனர். பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.[71] உயர்ந்த மலை காலநிலை மற்றும் பின்வாங்கும் வழி இல்லாதது ஆகியவற்றால் இமயமலையில் இவரது ராணுவமானது அழிக்கப்பட்டது.[70] கெட்ட செய்திகளுடன் திரும்பி வந்த சில வீரர்களும் சுல்தானின் ஆணையின் படி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[72]

இவரது ஆட்சியின் போது இவரது கொள்கைகளால் அரசின் வருவாய் வீழ்ச்சி அடைந்தது. அரசின் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக முகம்மது பின் துக்ளக் தன்னுடைய எப்போதும் சுருங்கிக் கொண்டிருந்த பேரரசின் மீது வரிகளை கூர்மையாக அதிகப்படுத்தினார். போர் காலங்களை தவிர்த்து தன்னுடைய ஊழியர்களுக்கு தன்னுடைய கருவூலத்தில் இருந்து இவர் சம்பளம் செலுத்தவில்லை. தன்னுடைய ராணுவம், நீதிபதிகள், அரசவை ஆலோசகர்கள், ஆளுநர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தன்னிடம் சேவையாற்றிய பிறருக்கு இந்த கிராமங்கள் மீது கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுத்ததன் மூலம் முகம்மது பின் துக்ளக் அவர்களுக்கு சம்பளம் வழங்கினார் என இப்னு பதூதா தன்னுடைய நினைவு குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை தனது கருவூலத்தில் சேர்த்தார்.[73][74] வரி செலுத்த தவறியவர்கள் வேட்டையாடி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[41] சிந்து (தற்போது பாக்கித்தானில்) மற்றும் குசராத்தில் (தற்போது இந்தியாவில்) கிளர்ச்சி செய்தோர் மற்றும் வரி செலுத்த மறுத்த மக்களை விரட்டி, தண்டனை கொடுக்க முயற்சித்த போது மார்ச் 1351இல்[5] முகம்மது பின் துக்ளக் இறந்தார்.[55]

முகம்மது பின் துக்ளக்கின் தில்லி சுல்தானகத்தின் புவியியல் ரீதியான கட்டுப்பாட்டு பகுதியானது நருமதை ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி மட்டுமே என சுருங்கி விட்டது.[5]

பெரோஸ் ஷா துக்ளக் தொகு

பெரோஸ் ஷா கோட்லா
பெரோஸ் ஷா கோட்லாவின் தோராயமான மறு உருவாக்கம்.[78]
பெரோஸ் ஷா கோட்லாவின் மேற்கு வாயில், அண். 1800
பெரோஸ் ஷா கோட்லாவில் அசோகரின் தில்லி-தோபுரா தூண்
துக்ளக் அரமரபானது அதன் கட்டடக்கலை புரவலத் தன்மைக்காக நினைவுபடுத்தப்படுகிறது. புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா கோட்டையானது பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகரால் எழுப்பப்பட்ட ஒரு பழைய பௌத்த துணை மீண்டும் பயன்படுத்தியது. இத்தூண் தற்போது தில்லி-தோபுரா தூண் என்று அழைக்கப்படுகிறது. சுல்தானகமானது தொடக்கத்தில் இந்தத் தூணை ஒரு மசூதி மினாரை உருவாக்குவதற்காக பயன்படுத்த விரும்பியது. ஆனால் பிரூசு ஷா துக்ளக் வேறு எண்ணம் கொண்டிருந்தார். இத்தூணை ஒரு மசூதிக்கு அருகில் நிறுவினார்.[75] அசோகரின் தூண்களின் பிராமி எழுத்துக்களின் பொருளானது பிரூசு ஷாவின் காலத்தின் போது அறியப்படாமல் இருந்தது.[76][77]

முகம்மது பின் துக்ளக் இறந்ததற்குப் பிறகு அவரது உறவினரான மகுமூது இப்னு முகம்மது ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ஆட்சி செய்தார். இதற்கு பிறகு முகம்மது பின் துக்ளக்கின் 45 வயது உறவினரான பிரூசு ஷா துக்ளக் அவருக்கு பதிலாக அரியணைக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலம் 37 ஆண்டுகளுக்கு நீடித்தது.[79] நைலா என்றழைக்கப்பட்ட இளவரசி மீது இவரது தந்தை சிபா ரசப் மோகம் கொண்டார். தொடக்கத்தில் இவரை மணந்து கொள்ள அப்பெண் மறுப்பு தெரிவித்தார். அப்பெண்ணின் தந்தையும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு சுல்தான் முகம்மது பின் துக்ளக்கும், சிபா ரசப்பும் ஓர் இராணுவத்தை அனுப்பினர். ஓர் ஆண்டுக்கான வரிகளை முன்னரே செலுத்தாவிட்டால் அப்பெண்ணின் குடும்பம் மற்றும் அபோகர் இன மக்களின் அனைத்து உடைமைகளையும் பறிமுதல் செய்வோம் என்று அச்சுறுத்தினர். அப்பெண்ணின் இராச்சியமானது பஞ்சங்களால் பாதிக்கப்பட்டு வந்தது. பிணையத் தொகையை அவர்களால் செலுத்த இயலவில்லை. தன் குடும்பம் மற்றும் மக்களுக்கு எதிராக பிணையத் தொகை கோரப்பட்டதை அறிந்த அந்த இளவரசி, தன் மக்களை இராணுவம் எதுவும் செய்யாவிட்டால் தன்னை தியாகம் செய்து கொள்ள முடிவெடுத்தார். சிபா ரசப்பும், சுல்தானும் இதை ஏற்றுக் கொண்டனர். சிபா ரசப்பும், நைலாவும் திருமணம் செய்து கொண்டனர். பிரோசு ஷா துக்ளக் அவர்களது முதல் மகன் ஆவார்.[80]

முகம்மது பின் துக்ளக், மற்றும் பிரோசு ஷா துக்ளக்கின் முதல் ஆறு ஆண்டுகளுக்கு சேவையாற்றிய அரசவை வரலாற்றாளரான சியாவுதீன் பரணி முகம்மதுவிடம் சேவையாற்றிய அனைவரையும் பதவி நீக்கம் செய்து பிரோசு ஷா மரண தண்டனைக்கு உட்படுத்தியதாக குறிப்பிடுகிறார். தில்லிக்கு இசுலாமிய ஆட்சி வந்ததிலிருந்து இறையாண்மையுள்ள மிதவாத ஆட்சியாளர் பிரூசு ஷா தான் என்று தனது இரண்டாவது நூலில் பரணி குறிப்பிடுகிறார். தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கிராமங்களிலிருந்து வசூலித்த வரி மூலம் போர் வீரர்கள் வாழ்வை அனுபவித்தனர். முந்தைய அரசியல் அமைப்புகளில் இருந்ததைப் போல் அடிக்கடி போருக்கு செல்ல வேண்டிய தேவை அவர்களிடம் இல்லை.[5] அபிப் போன்ற பிற அரசவை வரலாற்றாளர்கள் பிரோசு ஷா துக்ளக்குக்கு எதிராக நடத்தப்பட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சதித் திட்டங்கள் மற்றும் அரசியல் கொலை முயற்சிகளை பதிவிட்டுள்ளார். இவரது உறவினர் மற்றும் முகம்மது பின் துக்ளக்கின் மகள் ஆகியோர் இத்தகைய திட்டங்களை இவருக்கு எதிராக நடத்தியவர்களில் சிலர் ஆவர்.[81]

பழைய இராச்சியத்தின் எல்லையை மீண்டும் பெறும் முயற்சியாக வங்காளத்துடன் ஒரு போரை 1359இல் 11 மாதங்களுக்கு பிரோசு ஷா துக்ளக் நடத்தினார். எனினும், வங்காளம் வீழவில்லை. தில்லி சுல்தானகத்தின் அதிகாரத்திற்கு வெளியிலேயே அது தொடர்ந்தது. பிரூசு ஷா துக்ளக் இராணுவ ரீதியில் ஓரளவுக்கு பலவீனமானவராக இருந்தார். இதற்கு முக்கிய காரணம் இராணுவத்துக்கு தலைமை தாங்குவதில் இவருக்கு இருந்த திறமையின்மை ஆகும்.[79]

பிரூசு ஷா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது ஆட்சியானது முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியை விட மிதமான தன்மை உடையதாக இருந்ததென இவரது அரசவை வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[82] பிரூசு ஷா ஆட்சிக்கு வந்த போது சுல்தானகமானது ஒரு வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், கைவிடப்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டணங்கள், மற்றும் தொடர்ச்சியான பஞ்சங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. யமுனை-காகர் மற்றும் யமுனை-சட்லெஜ் ஆறுகளை இணைத்த ஒரு நீர்ப் பாசன கால்வாய், பாலங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு திட்டங்களை இவர் கொண்டு வந்தார்.[5] இந்த நீர்ப்பாசன கால்வாய்கள் 19ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தன.[82] 1388இல் பெரோஸ் இறந்ததற்கு பிறகு துக்ளக் அரசமரபின் சக்தியானது தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. திறமையான தலைவர்கள் யாரும் அரியணைக்கு வரவில்லை. பிரோசு ஷா துக்ளக்கின் இறப்பானது இராச்சியத்தில் அரசின்மை மற்றும் சிதைவை உருவாக்கியது. இவரது இறப்புக்கு முந்தைய ஆண்டுகளிலேயே இவரது வழித்தோன்றல்கள் மத்தியிலான உட்புறச் சண்டையானது ஏற்கனவே வெடித்திருந்தது.[5]

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 Edmund Wright (2006), A Dictionary of World History, 2nd Edition, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192807007
 2. Grey flag with black vertical stripe according to the கற்றலான் நிலப்படம் of அண். 1375:   in the depiction of the Delhi Sultanate in the Catalan Atlas
 3. Kadoi, Yuka (2010). "On the Timurid flag". Beiträge zur islamischen Kunst und Archäologie 2: 148. https://www.academia.edu/17410816. ""...helps identify another curious flag found in northern India – a brown or originally sliver flag with a vertical black line – as the flag of the Delhi Sultanate (602-962/1206-1555)."". 
 4. Note: other sources describe the use of two flags: the black Abbasid flag, and the red Ghurid flag, as well as various banners with figures of the new moon, a dragon or a lion. "Large banners were carried with the army. In the beginning the sultans had only two colours : on the right were black flags, of Abbasid colour; and on the left they carried their own colour, red, which was derived from Ghor. Qutb-u'd-din Aibak's standards bore the figures of the new moon, a dragon or a lion; Firuz Shah's flags also displayed a dragon." in Qurashi, Ishtiyaq Hussian (1942). The Administration of the Sultanate of Delhi. Kashmiri Bazar Lahore: SH. MUHAMMAD ASHRAF. p. 143. , also in Jha, Sadan (8 January 2016). Reverence, Resistance and Politics of Seeing the Indian National Flag (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-11887-4., also "On the right of the Sultan was carried the black standard of the Abbasids and on the left the red standard of Ghor." in Thapliyal, Uma Prasad (1938). The Dhvaja, Standards and Flags of India: A Study (in ஆங்கிலம்). B.R. Publishing Corporation. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7018-092-0.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Jackson, Peter (2003). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge, England: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521543293.
 6. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 147, map XIV.3 (j). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
 7. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2010-11-14.
 8. Lombok, E.J. Brill's First Encyclopedia of Islam, Vol 5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09796-1, pp 30, 129-130
 9. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 90–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
 10. 10.0 10.1 W. Haig (1958), The Cambridge History of India: Turks and Afghans, Volume 3, Cambridge University Press, pp 153-163
 11. ÇAĞMAN, FİLİZ; TANINDI, ZEREN (2011). "Selections from Jalayirid Books in the Libraries of Istanbul". Muqarnas 28: 231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0732-2992. https://www.jstor.org/stable/pdf/23350289.pdf. ""முகம்மது பின் துக்ளக் and his successors were contemporaries of the சலயிர் சுல்தானகம் sultans; both dynasties were Turco-Mongol"". 
 12. Jamal Malik (2008). Islam in South Asia: A Short History. Brill Publishers. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004168596. The founder of this new Turkish dynasty...
 13. 13.0 13.1 Banarsi Prasad Saksena 1970, ப. 460.
 14. An Advanced History of Muslim Rule in Indo-Pakistan. the University of Michigan. 1967. p. 94.
 15. Aniruddha Ray (2019). The Sultanate of Delhi (1206-1526)Polity, Economy, Society and Culture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000007299.
 16. Khalid Ahmad Nizami (1997). History and Culture of the Indian People, Volume 06, the Delhi Sultanate. Royalty in Medieval India. Munshiram Manoharlal Publishers. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121507332.
 17. Banarsi Prasad Saksena 1970, ப. 461.
 18. Surender Singh (30 September 2019). The Making of Medieval Panjab: Politics, Society and Culture c. 1000–c. 1500. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000760682.
 19. Banarsi Prasad Saksena 1970, ப. 460, 461.
 20. Massing, Jean Michel; Albuquerque, Luís de; Brown, Jonathan; González, J. J. Martín (1 January 1991). Circa 1492: Art in the Age of Exploration (in ஆங்கிலம்). Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-05167-4.
 21. The caption for the Sultan of Delhi reads: Here is a great sultan, powerful and very rich: the sultan has seven hundred elephants and a hundred thousand horsemen under his command. He also has countless foot soldiers. In this part of the land there is a lot of gold and precious stones.
  The caption for the southern king reads:
  Here rules the king of Colombo, a Christian.
  He was mistakenly identified as Christian because of the Christian mission established in Kollam since 1329.

  In Liščák, Vladimír (2017). "Mapa mondi (Catalan Atlas of 1375), Majorcan cartographic school, and 14th century Asia". International Cartographic Association: 5. https://www.proc-int-cartogr-assoc.net/1/69/2018/ica-proc-1-69-2018.pdf. 
 22. Cartography between Christian Europe and the Arabic-Islamic World, 1100-1500: Divergent Traditions (in ஆங்கிலம்). BRILL. 17 June 2021. pp. 176–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-44603-8.
 23. 23.0 23.1 Holt et al. (1977), The Cambridge History of Islam, Vol 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521291378, pp 11-15
 24. Vincent Smith, The Oxford Student's History of India கூகுள் புத்தகங்களில், Oxford University Press, pp 81-82
 25. 25.0 25.1 25.2 William Hunter (1903), A Brief History of the Indian Peoples, p. 123, கூகுள் புத்தகங்களில், Frowde - Publisher to the Oxford University, London, 23rd Edition, pages 123-124
 26. Elliot and Dowson (Translators), Tarikh-I Alai Amir Khusru, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 67-92; Quote - "The Rai again escaped him, and he ordered a general massacre at Kandur. He heard that in Brahmastpuri there was a golden idol. (He found it). He then determined on razing the beautiful temple to the ground. The roof was covered with rubies and emeralds, in short, it was the holy place of the Hindus, which Malik dug up from its foundations with the greatest care, while heads of idolaters fell to the ground and blood flowed in torrents. The Musulmans destroyed all the lings (idols). Many gold and valuable jewels fell into the hands of the Musulmans who returned to the royal canopy in April 1311 AD. Malik Kafur and the Musulmans destroyed all the temples at Birdhul, and placed in the plunder in the public treasury."
 27. Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 214-218
 28. Mohammad Arshad (1967), An Advanced History of Muslim Rule in Indo-Pakistan, இணையக் கணினி நூலக மையம் 297321674, pp 90-92
 29. 29.0 29.1 Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 229-231
 30. 30.0 30.1 30.2 William Lowe (Translator), Muntakhabu-t-tawārīkh, p. 296, கூகுள் புத்தகங்களில், Volume 1, pages 296-301
 31. Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 233-234
 32. ÇAĞMAN, FİLİZ; TANINDI, ZEREN (2011). "Selections from Jalayirid Books in the Libraries of Istanbul". Muqarnas 28: 230, 258 Fig.56. பன்னாட்டுத் தர தொடர் எண்:0732-2992. https://www.jstor.org/stable/pdf/23350289.pdf. 
 33. Elliot and Dowson (Translators), Travels of Ibn Battuta Ibn Battuta, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 609-611
 34. Henry Sharp (1938), DELHI: A STORY IN STONE, Journal of the Royal Society of Arts, Vol. 86, No. 4448, pp 324-325
 35. Elliot and Dowson (Translators), Táríkh-i Fíroz Sháh Ziauddin Barani, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 609-611
 36. 36.0 36.1 36.2 Vincent A Smith, The Oxford History of India: From the Earliest Times to the End of 1911, p. 217, கூகுள் புத்தகங்களில், Chapter 2, pp 236-242, Oxford University Press
 37. Elliot and Dowson, Táríkh-i Fíroz Sháhí of Ziauddin Barani, The History of India, as Told by Its Own Historians. The Muhammadan Period (Vol 3), London, Trübner & Co
 38. 38.0 38.1 38.2 Muḥammad ibn Tughluq Encyclopædia Britannica
 39. Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pp. 236–237
 40. 40.0 40.1 40.2 Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pp. 235–240
 41. 41.0 41.1 41.2 41.3 41.4 William Hunter (1903), A Brief History of the Indian Peoples, p. 124, கூகுள் புத்தகங்களில், 23rd Edition, pp. 124-127
 42. Aniruddha Ray (March 4, 2019). The Sultanate of Delhi (1206-1526): Polity, Economy, Society and Culture. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000007299. The Sultan created Daulatabad as the second administrative centre. A contemporary writer has written that the Empire had two capitals - Delhi and Daulatabad.
 43. Carl W. Ernst (1992). Eternal Garden: Mysticism, History, and Politics at a South Asian Sufi Center. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438402123.
 44. Aniruddha Ray (March 4, 2019). The Sultanate of Delhi (1206-1526): Polity, Economy, Society and Culture. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000007299.
 45. Aniruddha Ray (4 March 2019). The Sultanate of Delhi (1206-1526): Polity, Economy, Society and Culture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000007299. The primary result of the transfer of the capital to Daulatabad was the hatred of the people towards the Sultan.
 46. P.M. Holt; Ann K.S. Lambton; Bernard Lewis (22 May 1977). The Cambridge History of Islam" Volume 2A. Camgridge University Press. p. 15.
 47. Kousar.J. Azam (2017). Languages and Literary Cultures in Hyderabad. Taylor & Francis. p. 8.
 48. Richard Eaton, Temple Desecration and Muslim States in Medieval India கூகுள் புத்தகங்களில், (2004)
 49. Raj Kumar (2003). Essays on Medieval India. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171416837.
 50. Kate Fleet, Gudrun Krämer, Denis Matringe, John Nawas, Devin J. Stewart. "Jalal al-Din Ahsan".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 51. M. S. Nagaraja Rao (1987). Kusumāñjali:New Interpretation of Indian Art & Culture : Sh. C. Sivaramamurti Commemoration Volume · Volume 2.
 52. Hermann Kulke and Dietmar Rothermund, A History of India, (Routledge, 1986), 188.
 53. Advanced Study in the History of Medieval India by Jl Mehta p. 97
 54. A Social History of the Deccan, 1300-1761: Eight Indian Lives, by Richard M. Eaton p.50
 55. 55.0 55.1 Vincent A Smith, The Oxford History of India: From the Earliest Times to the End of 1911, p. 217, கூகுள் புத்தகங்களில், Chapter 2, pp. 242–248, Oxford University Press
 56. Ahmed Farooqui, Salma (2011). Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century. Pearson. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789332500983.
 57. Architecture and art of the Deccan sultanates (in English) (Vol 7 ed.). Cambridge University Press. 1999. pp. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521563215.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 58. Wink, André (2020). The Making of the Indo-Islamic World C.700-1800 CE (in English). Cambridge University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108417747.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 59. Government Gazette The United Provinces of Agra and Oudh (in English) (Part 2 ed.). Harvard University. 1910. p. 314.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 60. See:
 61. McCann, Michael W. (1994-07-15). Rights at Work: Pay Equity Reform and the Politics of Legal Mobilization (in ஆங்கிலம்). University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-55571-3.
 62. Suvorova (2000). Masnavi. p. 3.
 63. Husaini (Saiyid.), Abdul Qadir (1960). Bahman Shāh, the Founder of the Bahmani Kingdom (in ஆங்கிலம்). Firma K.L. Mukhopadhyay. pp. 59–60.
 64. Jayanta Gaḍakarī (2000). Hindu Muslim Communalism, a Panchnama. p. 140.
 65. Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pages 239-242
 66. Cornelius Walford (1878), The Famines of the World: Past and Present, p. 3, கூகுள் புத்தகங்களில், pp. 9–10
 67. Judith Walsh, A Brief History of India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0816083626, pp. 70–72; Quote: "In 1335-42, during a severe famine and death in the Delhi region, the Sultanate offered no help to the starving residents."
 68. Domenic Marbaniang, "The Corrosion of Gold in Light of Modern Christian Economics", Journal of Contemporary Christian, Vol. 5, No. 1 (Bangalore: CFCC), August 2013, p. 66
 69. John Keay, India: A History (New Delhi: Harper Perennial, 2000), p. 269
 70. 70.0 70.1 Tarikh-I Firoz Shahi Ziauddin Barni, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pp. 241–243
 71. Chandra, Satish (1997). Medieval India: From Sultanate to the Mughals. New Delhi, India: Har-Anand Publications. pp. 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8124105221.
 72. Vincent A Smith, The Oxford History of India: From the Earliest Times to the End of 1911, Oxford University Press, Chapter 2, pp. 236–242
 73. Ross Dunn (1989), The Adventures of Ibn Battuta: A Muslim Traveler of the 14th Century, University of California Press, Berkeley, Excerpts பரணிடப்பட்டது 24 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம்
 74. Ibn Battuta's Trip: Chapter 7 - Delhi, capital of Muslim India பரணிடப்பட்டது 24 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம் Travels of Ibn Battuta: 1334-1341, University of California, Berkeley
 75. McKibben, William Jeffrey (1994). "The Monumental Pillars of Fīrūz Shāh Tughluq". Ars Orientalis 24: 105–118. 
 76. HM Elliot & John Dawson (1871), Tarikh I Firozi Shahi - Records of Court Historian Sams-i-Siraj The History of India as told by its own historians, Volume 3, Cornell University Archives, pp 352-353
 77. Prinsep, J (1837). "Interpretation of the most ancient of inscriptions on the pillar called lat of Feroz Shah, near Delhi, and of the Allahabad, Radhia and Mattiah pillar, or lat inscriptions which agree therewith". Journal of the Asiatic Society 6 (2): 600–609. https://archive.org/stream/journalofasiatic62asia#page/600/mode/2up. 
 78. Memoirs of the Archaeological Survey of India no.52. 1937. p. Plate II.
 79. 79.0 79.1 Jackson, Peter (1999). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge, England: Cambridge University Press. pp. 296–309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-40477-8.
 80. Elliot and Dowson (Translators), Tarikh-i Firoz Shahi Shams-i Siraj 'Afif, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pp. 271–273
 81. Elliot and Dowson (Translators), Tarikh-i Firoz Shahi Shams-i Siraj 'Afif, The History of India by its own Historians - The Muhammadan Period, Volume 3, Trubner London, pp. 290–292
 82. 82.0 82.1 William Hunter (1903), A Brief History of the Indian Peoples, p. 126, கூகுள் புத்தகங்களில், Frowde - Publisher to the Oxford University, London, 23rd Edition, pp. 126–127


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்_வம்சம்&oldid=3849284" இலிருந்து மீள்விக்கப்பட்டது