துங்கா பாலம்

துங்கா பாலம் (Tunga Bridge) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் துங்கா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மிகப் பழமையான பாலங்களில் ஒன்றாகும். சிமோகா மாவட்டத்திலுள்ள தீர்த்தகள்ளி நகரத்தில் இப்பாலம் உள்ளது.

துங்கா பாலம் 75 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். பாரத ரத்னா விருது பெற்ற சர் எம். விசுவேசுவரய்யாவின் மேற்பார்வையில் இப்பாலம் வடிவமைத்து கட்டப்பட்டது. [1] குருவள்ளி கிராமப் பகுதியை இப்பாலம் தீர்த்தகள்ளி நகரத்துடன் இணைக்கிறது. துங்கா பாலம் ஜெயச்சாமராசேந்திர பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் பாலத்தின் தனித்துவத்தைக் காண்பதற்காக துங்கா பாலம் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.

கட்டமைப்பு தொகு

பாலமானது மேலே ஒரு வில் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வில்லமைப்பு பாலத்தின் இருபுறமும் உள்ள தொடர்ச்சியான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. மேலே வளைவு உருளை போன்ற கட்டமைப்புகள் உள்ளன. இரண்டு வளைவுகளையும் இணைத்து ஒரு கூரையாகத் தோன்றும் இந்த தனித்துவமான பாலம் சிறிய வித்தியாசங்கள் மட்டும் கொண்டு சிட்னி துறைமுகப் பாலத்தை ஒத்திருக்கிறது.[1]

வரலாறு தொகு

துங்கா பாலம் 1943 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது, பின்னர் மைசூர் மகாராசாவான எச். எச். செயயச்சாமராசேந்திர வாடியாரால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Tunga Bridge, Thirthahalli". www.karnatakaholidays.com. Archived from the original on 2016-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கா_பாலம்&oldid=3558710" இலிருந்து மீள்விக்கப்பட்டது