தும்கூர் மாவட்டம்
தும்கூர் மாவட்டம் (கன்னடம்: ತುಮಕೂರು ಜಿಲ್ಲೆ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் தும்கூர் நகரத்தில் உள்ளது. 10,598 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடு 77.1°, வடக்கு நில நேர்க்கோடு 13.34° என்னும் ஆள்கூறுகளால் குறிக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் பெரும்பகுதி பள்ளத்தாக்குகள் இடையிடையே ஊடறுத்துச் செல்லும் உயரமான நிலப்பகுதிகள் ஆகும்.
தும்கூரு | |
— district — | |
அமைவிடம் | 13°20′N 77°06′E / 13.34°N 77.1°Eஆள்கூறுகள்: 13°20′N 77°06′E / 13.34°N 77.1°E |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
வட்டம் | தும்கூரு, குப்பி, திப்தூர், துருவேக்கரே, குனிகல், மதுகிரி, பாவகடா, கொரத்தகெரே, சிக்கநாயக்கனகள்ளி, சிரா |
தலைமையகம் | தும்கூரு |
ஆளுநர் | வாஜுபாய் வாலா |
முதலமைச்சர் | பி. எஸ். எதியூரப்பா |
பதில் ஆணையர் | |
மக்களவைத் தொகுதி | தும்கூரு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.tumkurcity.gov.in |
இம் மாவட்டத்தின் தெற்கில் மாண்டியா மாவட்டமும், மேற்கில் சித்திரதுர்க்கா ஹாசன் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் சிக்மகளூர் மாவட்டமும், தென்கிழக்கில் ஆந்திரப்பிரதேச மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 2,584,711 ஆகும்.