துருவம்
புவியியல் துருவங்கள் எனப்படுபவை ஒரு கோளின் சுழலச்சின் இரு முனைகள். பூமியிலும் இப்படி இரு துருவங்கள் உள்ளன. அவை - வட துருவம் மற்றும் தென் துருவம். இவற்றுள் வட துருவம் கோளின் நிலநடுக் கோட்டின் வடக்கே 90 பாகை (நிலநேர்க்கோட்டு முறையில்) அளவிலும் தென் துருவம் தெற்கே 90 பாகை அளவிலும் அமைந்துள்ளன. காந்தவியல் துருவங்களும் இவையும் ஒன்றல்ல, வேறு வேறாகும்.