துரைராசா ரவிகரன்

(துரைராஜா ரவிகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆறுமுகம் சின்னத்துரை துரைராசா ரவிகரன் (Arumugam Sinnaththurai Thurairajah Raviharan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.

துரைராஜா ரவிகரன்
T. Raviharan
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனம்இலங்கைத் தமிழர்

இரவிகரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,868 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 14 இல் கொழும்பில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[3]

இவர் வட மாகாண சபையில் மீன்பிடி, போக்குவரத்து, வணிக, மற்றும் ஊராட்சி அமைச்சருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரைராசா_ரவிகரன்&oldid=3295640" இலிருந்து மீள்விக்கப்பட்டது