துர்வா அணை
துர்வா அணை (Dhurwa Dam) என்பது அதிகாரப்பூர்வமாக ஹடியா அணை என்று அழைக்கப்படுகிறது. இது சார்க்கண்டு மாநிலத்தின் ராஞ்சியில் ஓடும் சுபர்ணரேகா ஆற்றில் உள்ள கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க அணை ஆகும்.
துர்வா அணை | |
---|---|
துர்வா அணை ராஞ்சி, சார்க்கண்டு | |
அதிகாரபூர்வ பெயர் | துர்வா அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | துர்வா, ராஞ்சி, சார்க்கண்டு |
புவியியல் ஆள்கூற்று | 23°17′29.19″N 85°15′23.58″E / 23.2914417°N 85.2565500°E |
நிலை | செயல்பாட்டில் |
திறந்தது | 1963 |
உரிமையாளர்(கள்) | JUIDCO |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | சுபர்ணரேகா ஆறு |
உயரம் | 30 m (98 அடி) |
நீளம் | 4,525 m (14,846 அடி) |
வழிகால்கள் | 1 |
வழிகால் வகை | Ogee |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | துர்வா நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 1.37 km3 (1,110,677 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 0.44 km3 (356,714 acre⋅ft) |
மேற்பரப்பு பகுதி | 33.5 km2 (13 sq mi) |
விளக்கம்
தொகு1963ஆம் ஆண்டில் உருசியா உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தினமும் சுமார் 9 மில்லியன் கேலன் குடிநீர் வழங்குகிறது. இதில் நகரத்திற்கு 8.5 மில்லியன் கேலனும் கனரகத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 1 மில்லியன் கேலனும் வழங்குகிறது. கூடுதலாக 12 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ராஞ்சி திறன் நகர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அணை நீர் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், குறிப்பாகக் கோடையில் நீர் மட்டங்கள் கணிசமாகக் குறையும் போது இது சவால்களை எதிர்கொள்கிறது.[1][2]
சார்க்கண்டு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் துர்வா அணை சுமார் 1.3 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கத் திறனைக் கொண்டுள்ளது. இது உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் பாசனத்திற்கு முக்கியமானது. இந்த அணை உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், இதன் இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கும் இயற்கையான நடைப்பயணங்களுக்கும் பார்வையாளர்கள் ரசிக்க இது ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை வளர்ந்து வரும் நகர்ப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்த கவலைகளை எழுப்புகையில், தற்போதைய குடியிருப்பாளர்களுக்கும் எதிர்கால முன்னேற்றங்களுக்கும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காகக் கூடுதல் நீர் ஆதாரங்களை உருவாக்க சார்க்கண்டு அரசு முன்வந்துள்ளது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ranchi Smart City to get water from water starved Dhurwa dam - Jharkhand State News". jharkhandstatenews.com. 31 March 2018. பார்க்கப்பட்ட நாள் 31 March 2018.
- ↑ "Body fished out of dam". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
- ↑ "State level mock drill conducted in Dhurwa Dam regarding to combat flood disaster in Ranchi - Reporter Post". reporterpost.in. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.