துலுக்க நாச்சியார்

(துலுக்கநாச்சியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இவருடைய வரலாற்றை மையமாகக் கொண்டு துலுக்க நாச்சியார் நாட்டிய நாடகம் அமைக்கப் பெற்றுள்ளது. [1] இவருக்கு திருவரங்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் ஈசான மூலையில் தனி சந்நிதி உள்ளது. இசுலாமிய வழக்கப்படி அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. [2]. இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

திருவரங்கத்தினை டில்லி பாதுசா படையெடுத்து வந்தபோது, டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். பாதுசாவின் மகளான சுரதானி என்பவர் அந்த விக்ரகத்தினை கண்டு மனதை பறிகொடுத்தார். அரங்கநாதரை மீண்டும் திருவரங்கத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தபோது, இளவரசியான சுரதானி அரங்கநாதரை பிரிய மனமின்றி திருவரங்கத்தினை அடைந்தார். [3] இவரை அரங்கனின் ஏழு மனைவிகளுள் ஒருவராக குறிப்பிடுகிறார்கள்.

காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05145l3.htm
  2. http://dinamani.com/religion/article1181786.ece?service=print
  3. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=2

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலுக்க_நாச்சியார்&oldid=3819988" இலிருந்து மீள்விக்கப்பட்டது