துளசி இராமாயணம்
துளசி இராமாயணம் என்பது துளசிதாசர் எழுதிய நூலாகும்.[1] இந்நூல் வால்மீகி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல் இராமசரிதமானசா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது.
இராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான இராமசரிதமானசா, வால்மீகியின் இராமாயணத்தின் அவாதிப் பதிப்பு. "அவாதி" அல்லாமல் இராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் காணப்படுகிறது. அவை "போஜ்புரி", "பிரிஜ்பாஸா" மற்றும் "சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி". இராமசரிதமானசா, சமசுகிருத இராமாயணத்தின் மற்ற நூல்களைப் போலவே, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது. இது சௌபாய் என்றழைக்கப்படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் நூல்.
இது துளசி-க்ரிதி இராமாயணா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசும் இந்துக்களிடேயே மிகவும் நன்றாக அறியப்பட்டுள்ளது. இதன் பல செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது. மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை. அவருடைய போதனைகள் உண்மையிலேயே நிகழ்கால இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல் மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது. மேலும் துளசிதாசர் எந்த சித்தாந்தத்தையும் ஏற்படுத்தாதபோதும் அவர் ஒரு கவிஞராகவும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
துளசிதாசரின் இராமசரிதமானசா மற்றும் வால்மீகி இராமாயணத்துக்குமிடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு உதாரணமாக இருப்பது, இராமனை வனவாசத்துக்கு அனுப்புவதற்காக கைகேயி தன் கணவரை வற்புறுத்தும் காட்சி. துளசி தாசரில், வலுவான பண்புரு மற்றும் அருமையான உவமைகளுடன் அது மிக நீளமாகவும் கூடுதல் உளவியல் தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது.[2]
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.
- ↑ "துளசி இராமாயணம் (உரைநடை )". Archived from the original on 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.