துளசிமாறன் தருமலிங்கம்

(துளசி தருமலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துளசி தருமலிங்கம் (Thulasi Tharumalingam, பிறப்பு: ஒக்டோபர் 24, 1992) செருமனியின் சுவானெவெடேயைப் பிறப்பிடமாகவும், செருமனி புரூக்சாலை வதிவிடமாகவும் கொண்ட[1] யெர்மனிய, ஈழத்து குத்துச்சண்டை வீரர் ஆவார்.[2]

துளசிமாறன் தருமலிங்கம்
Thulasimaran Tharumalingam
புள்ளிவிபரம்
பிரிவு64கிகி இலகு எடை
தேசியம்செருமனியர், கத்தாரியர்
பிறப்புஅக்டோபர் 24, 1992 (1992-10-24) (அகவை 31)
பிறந்த இடம்சுவானெவெடே, செருமனி

குடும்பம் தொகு

இவரது பெற்றோர்களான நளினி, தருமலிங்கம் தம்பதிகள் ஈழத்தில், பருத்தித்துறை, புலோலிதெற்கு, சாரையடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவருக்கு குறிஞ்சிமாறன் என்றொரு சகோதரனும், பவித்திரா என்றொரு சகோதரியும் உள்ளார்கள். குறிஞ்சிமாறனும் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவர்.

குத்துச்சண்டைப் போட்டி தொகு

இவர் 125க்கு மேலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளர். ஆறு முறைகள் நிடர்சாக்சன்(Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், யேர்மனிய நாட்டில் Bundesliga குத்துச்சண்டைப் போட்டியில் யேர்மனியின் சம்பியனாகவும் வந்துள்ளார். 2016 இல் கோடை ஒலிம்பிக் போட்டியில் கட்டார் நாட்டுக்காக விளையாடியுள்ளார்.[3][4] இவர் தொடர்ந்து நான்கு தடவைகள் குத்துச்சண்டையில் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்துக்கது. இவர் போட்டிகளின் போது தளராது விளையாடுவதால் இவருக்கு Tiger என்ற பட்டப்பெயரும் இருக்கிறது. இவர் 26.05.2018 அன்று யேர்மனியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் போட்டியாளரான KARIMLI யை ஆறு சுற்றுக்கள் மோதி வெற்றி பெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் கத்தார் நாட்டு குத்துச்சண்டை அணியில் 64கிகி இலகுவெடை ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். வெனிசுவேலாவின் வர்காசு நகரில் 2016 சூலை 3 முதல் சூலை 8 வரை நடைபெற்ற APB/WSB ஒலிம்பிக் தகுதி காண் போட்டித் தொடரில் இவர் விளையாடி, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கத்தார் நாடு சார்பில் விளையாடத் தகுதி பெற்றார்.[5] வெனிசுவேலாவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இத்தாலிய வீரர் மசிமிலியானோ பலிசாய் என்பவரை 3-0 என்ற கணக்கிலும், அரையிறுதிப் போட்டியில் அர்கெந்தீன வீரர் கார்லோசு டானியேல் அக்கீனோ என்பவரை 3-0 என்ற கணக்கிலும் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "THULASI THARUMALINGAM – 64KG". Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
  2. BoxRec Thulasi Tharumalingam
  3. Schwaneweder Boxtalent bei den Profis
  4. Tamilcnn ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் மொங்கோலிய வீரரிடம் மோதிய ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம் [தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "Semi-Final day at the APB/WSB Olympic Qualification Event in Venezuela confirms 16 Rio 2016 quota places". AIBA. Archived from the original on 11 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிமாறன்_தருமலிங்கம்&oldid=3607193" இலிருந்து மீள்விக்கப்பட்டது