தூண்டில் (திரைப்படம்)
தூண்டில் என்பது 2008ஆம் ஆண்டில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சாம், சந்தியா, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
தூண்டில் | |
---|---|
![]() வண்தட்டு அட்டைப்படம் | |
இயக்கம் | கே. எஸ். அதியமான் |
தயாரிப்பு | எம். ராஜ்குமார் எஸ். எஸ். ஆர். தில்லைநாதன் பி. காண்டீபன் |
கதை | கே. எஸ். அதியமான் (வசனம்) |
திரைக்கதை | கே. எஸ். அதியமான் |
இசை | அபிசேக் ராய் |
நடிப்பு | சாம் சந்தியா திவ்யா ஸ்பந்தனா விவேக் ரேவதி ஆர்கே |
ஒளிப்பதிவு | டி. கவியரசு |
படத்தொகுப்பு | வி. எம். உதயசங்கர் |
வெளியீடு | 22 பெப்பிரவரி 2008 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுகதைச்சுருக்கம்
தொகுலண்டனில் வசிக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த ஷாம்-சந்தியா தம்பதியினர். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் பெண்குழந்தை கிடைக்கப் பெறுகிறது. குழந்தை வளர்கிறது. ஒருநாள் குழந்தை காணாமல் போக,ஷாம்-சந்தியா தவிக்கின்றனர். அப்போது திவ்யா குழந்தையைக் கொண்டுவந்து ஒப்படைக்கிறாள். திவ்யாவும் ஷாமும் முன்னாள் காதலர்கள் என சந்தியாவிடம் தெரிவிக்கிறாள் திவ்யா. தன்னைக் காதலித்து கைவிட்ட ஷாமை பழிவாங்கவே திவ்யா குழந்தையைக் கடத்தியிருக்கிறாள். இறுதியில் தனது எண்ணம் தவறு என்றும் தன் வாழ்வை நாசமானதற்கு காரணம் ஆர்.கே. தான் என்பதை அறிந்து ஆர்.கே.வை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாள் திவ்யா. ஷாம்-சந்தியாவிடம் குழந்தையை ஒப்படைக்கின்றாள் திவ்யா [2]
ஒளிப்பதிவாளரின் அனுபவப் பதிவு
தொகுதூண்டில்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் டி.கவியரசு ஆவார். இவரது தாயார் இலட்சுமி.தந்தையார் தங்கவேல். கவியரசு அவர்கள் 'தூண்டில்' படப்பிடிப்பில் தமக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களைத் தொகுத்து சோழன் பதிப்பகம் வாயிலாக 'மேலைக்கடலில் ஈழக்காற்று" எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். [3]
விமர்சனம்
தொகுஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "சாதாரண கதையில், வாடகைத் தாய் மேட்டர் மட்டும் புதுசு. ஆனால், இவ்வளவு அஜாக்கிரதையாகவா செயற்கைக் கருத்தரிப்பை ஒரு டாக்டர் கையாளுவார்? வழக்கம் போல க்ளைமாக்ஸில் ஹீரோ நல்லவன்தான் என்று உணர்ந்து மன்னிப்பு கேட்கும் காட்சியும் சலிப்பு! திரைக்கதை என்னும் புழுவே இல்லாத தூண்டிலில் எந்த மீன்தான் சிக்கும்?" என்று எழுதி 38100 மதிப்பெண்களை வழங்கினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "திரைப்படம்.காம்". Archived from the original on 2016-03-12. Retrieved 2015-12-21.
- ↑ தூண்டில் தமிழ்த் திரைப்படம்
- ↑ மேலைக்கடலில் ஈழக்காற்று-த.கவியரசு-சோழன் பதிப்பகம் -முதல் பதிப்பு 2009-சோழன் படைப்பகம்