தூதரக அலுவலகம்

வெளிநாட்டு தூதரக அலுவலகம் (Embassy) என்பது ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஆகும்.. இது பொதுவாக மற்ற நாட்டின் தலைநகரங்களில் செயல்படும். அங்குதான் சொந்த நாட்டின் தூதுவர் மற்றும் பிற அலுவலர்கள் வேலை செய்கிறார்கள். இரு அரசாங்கங்களுக்கிடையேயான உறவுகளை பேணும் பெரும்பாலான இராஜதந்திர பேச்சுக்கள் தூதரக அலுவலகம் வாயிலாக நடக்கிறது. தூதரக அலுவலர்கள் தங்கள் நாட்டை நடத்தும் அரசினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் தூதரக அலுவலகம், முழு நாட்டின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு முழுப் பொறுப்பாகும்.

பொதுவாக தூதரகத்தின் தலைவராக ஒரு தூதவர் (Ambassador) இருப்பார். அவருக்கு உதவிட உயர் ஆணையர் அல்லது தூதரக அதிகாரிகளாகவும் இருக்கலாம்.

இந்தியாவின் வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள்

தொகு

இந்தியாவின் வெளிநாட்டு தூதரக அலுவலங்கள், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற்து.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூதரக_அலுவலகம்&oldid=4091564" இலிருந்து மீள்விக்கப்பட்டது