தூத்துக்குடியில் போக்குவரத்து

தூத்துக்குடி ஒரு தொழில் நகரம் ஆகும் . தூதுக்குடியியல் போக்குவரத்து நிலவழியில் சாலை மற்றும் தொடருந்துப் போக்குவரத்தையும், நீர்வழியில் கப்பல் போக்குவரத்தையும், வான்வழியில் வானூர்திப் போக்குவரத்தையும் கொண்டது. சென்னைக்கு அடுத்ததாக , தமிழகத்தில் அனைத்து வகை போக்குவரத்தையும் கொண்ட நகரம் தூத்துக்குடி .

சாலைவழி போக்குவரத்து தொகு

 
தூத்துக்குடி - ராமநாதபுரம் - சென்னை இ.சி.ஆர்

தூத்துக்குடி நகரம் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

தூத்துகுடியிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் :-

  • தூத்துக்குடி - மதுரை - திருச்சிராப்பள்ளி- விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் ( தே .நெ - 38 )[1]
  • தூத்துக்குடி - திருநெல்வேலி ( தே .நெ -138 )
  • தூத்துக்குடி - ராமநாதபுரம் - நாகப்பட்டினம் - புதுச்சேரி - திண்டிவனம் - சென்னை ( தே .நெ - 32)[2].
  • தூத்துக்குடி -பழையகாயல்  - திருச்செந்தூர் - கூடங்குளம் - கன்னியாகுமரி (மா.நெ -176)

பேருந்து சேவை :- தொகு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - திருநெல்வேலி, இந்நகரில் நகர பேருந்து சேவையையும், புறநகர், தொலைதூர பேருந்து சேவைகளையும் வழங்கி வருகிறது. மேலும், தனியார் பேருந்துகளும் இந்நகரில் இயங்குகின்றன .

தூத்துக்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை:-

  • பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (திருவைகுண்டம், திருச்செந்தூர், திருநெல்வேலி, ஏரல், நாசரேத் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான சிற்றுந்து சேவை)
  • புதிய பேருந்து நிலையம் (கோவில்பட்டி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, வேளாங்கண்ணி, கோயம்புத்தூர், உதகமண்டலம், திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, வேலூர், சென்னை, புதுச்சேரி, எர்ணாகுளம், கோழிக்கோடு, குருவாயூர், சங்கனாச்சேரி, திருப்பதி, பெங்களூரு போன்ற தொலைதூர நகரங்களுக்கான பேருந்து சேவை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான சிற்றுந்து சேவை)

தொடர்வண்டி போக்குவரத்து தொகு

 
தூத்துக்குடி ரயில் நிலையம்

இந்தியாவின் மிகப் பழமையான தொடர் வண்டி நிலையங்களுள் ஒன்று தூத்துக்குடி தொடர்வண்டி நிலையம் . 1899-ஆம் ஆண்டு சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்டது . இத்தொடர்வண்டி சேவையானது சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான Boat Mail சேவையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது . இத்தொடர்வண்டி பயணத்தின் தொடர்ச்சியாக தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு நீராவி கப்பல் இயக்கப்பட்டது .


தூதுக்குடியிலுள்ள தொடர்வண்டி நிலையங்கள் :-

வரிசை .எண் தொடர்வண்டி நிலையம் குறியீடு
1 தூத்துக்குடி (பிரதான தொடர்வண்டி நிலையம்) TN
2 தூத்துக்குடி மேலூர் TME
3 மீளவிட்டான் MVN

விமான வழி போக்குவரத்து தொகு

 
தூத்துக்குடி விமான நிலையம்

தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் , தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 கி .மி தொலைவில் உள்ள வாகைகுளத்தில் உள்ளது . தூத்துக்குடி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் மக்கள் இவ்விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள் .1992-ஆம் ஆண்டு இவ்விமான நிலையத்தை அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் , அன்றைய மத்திய விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு. M.O.H பாரூக்கும் திறந்து வைத்தனர். இவ்விமான நிலையம் 2018-ஆம் ஆண்டு ISO 9001:2015 தரச் சான்று பெற்றது . தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ,மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையம் ஆகும் .

இண்டிகோ நிறுவனம் தினமும் சென்னைக்கு 2 விமானங்களும் , பெங்களூருக்கு 1 விமானமும் இங்கிருந்து இயக்குகிறது .[3]

தூத்துக்குடிக்கு அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் (200 கி.மி ) மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையம் (152 கி.மி ) ஆகும் .

கடல்வழி போக்குவரத்து தொகு

 
வ .உ .சிதம்பரனார் துறைமுகம்

இந்தியாவின் முக்கியமான 13 துறைமுகங்களுள் ஒன்று தூத்துக்குடி வ.உ .சிதம்பரனார் துறைமுகம் ஆகும்.[4] இது தமிழகத்தின் இரண்டாம் பெரிய துறைமுகம் ஆகும். தமிழகத்தின் மூன்று பன்னாட்டு துறைமுகங்களில் ஒன்று வ.உ.சி. துறைமுகம் . மேலும் ,இத்துறைமுகம் இந்தியாவின் நான்காம் பெரிய கொள்கலன் முனையம் ஆகும் . கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவாக இத்துறைமுகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது .

விண்வெளி மையம் தொகு

தூத்துக்குடியிலிருந்து 55 கி.மி தொலைவிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு ஏவுதள மையம் அமைக்கும் பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தொடங்கியது . "பூமத்தியரேகைக்கு (Equator) அருகிலும் , கிழக்கு கடற்கரையிலும், இந்நகரம் அமைந்துள்ளதால் , இங்கு ராக்கெட் ஏவுதள மையம் அமைக்கப்படுகிறது " என ஒரு முன்னாள் இஸ்ரோ அதிகாரி கூறியுள்ளார் .

மேற்கோள்கள் தொகு

  1. "Wayback Machine" (PDF). web.archive.org. 2012-03-31. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Gazette Of GOI" (PDF).
  3. "தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்வு: இரவிலும் விமானத்தை இயக்கலாம்". Dinamalar. 2020-06-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.