தூர்தர்சி கட்சி
தூர்தர்சி கட்சி (ஆங்கிலம்: Doordarshi Party; இந்தி: दूरदर्शी; தூர் தர்சி கட்சி என்றும் எழுதப்பட்டது) இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இது குசராத்தில் அகமதாபாத்தில் 24 மார்ச் 1980 அன்று மதத் தலைவர் பாபா ஜெய் குருதேவால் சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக நிறுவப்பட்டது. இக்கட்சி மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறவில்லை என்பதால் 1997-இல் தேர்தல் அரசியலிலிருந்து விலகியது.[1]
தூர்தர்சி கட்சியின் கொள்கை அறிக்கை
தொகுதூர்தர்சி கட்சியானது கீழ்கண்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உறுதிமொழிகளுடன் பிரச்சாரம் செய்தது:
- இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தம்
- சிறையில் உள்ள அப்பாவிகளை விடுவித்தல்
- படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பு
- ஆக்ட்ரோய் வரிகளை ரத்து செய்தல்
- விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு
- தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை 60 வயதில் கட்டாய ஓய்வுடன் ஐந்தாண்டுகளுக்கு ஒரே பதவிக் காலத்திற்கு வரம்பிடுதல்
- நட்டத்தை ஏற்படுத்தும் தேசியமயமாக்கப்பட்ட தொழில்களின் விற்பனை
- கறுப்புப் பண ஒழிப்பு
- ஓய்வூதிய வயதை 60ஆகக் குறைத்து, அனைத்து ஓய்வூதிய நிதி உரிமையையும் உடனடியாகச் செலுத்துதல்
- தொழிற்சங்க அரசியலில் ஈடுபடுவதைத் தடை செய்தல்
- அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வரதட்சணை முறை அறிமுகம்
- அறிவுஜீவிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.
- இந்தியக் கடனை அடைக்க வேண்டும்
- அனைத்து நாடுகளும் இந்தியாவை உச்சச் சக்தியாகக் கருத வேண்டும்.
- ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மரியாதை மற்றும் கண்ணியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சைவ உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள்
தொகுதூர்தர்சி கட்சி மக்களவைக்கு மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனால் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் வெற்றிபெறவில்லை.[2]
ஆண்டு | போட்டியிட்ட இடங்கள் | வெற்றி பெற்றது | % வாக்குகள் |
---|---|---|---|
1984 | 97 | 00 | தகவல் இல்லை |
1989 | 288 | 00 | தகவல் இல்லை |
1991 | 321 | 00 | தகவல் இல்லை |
குசராத்து சட்டமன்றம் | ||||
---|---|---|---|---|
ஆண்டு | போட்டியிட்ட இடங்கள் | வெற்றி பெற்றது | வாக்குகள் | % வாக்குகள் |
1985 | 153 | 0 | 92,21,149 | 0.5% |
1990 | 168 | 0 | 1,26,85,977 | 0.4% |
1995 | 160 | 0 | 1,80,48,194 | 0.7% |
ஆதாரம்:[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jai Gurudev still pulls weight in UP". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 June 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "Poll Stats Genie". IBNLive.com. CNN-IBN. Archived from the original on 3 March 2009. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "Vidhan Sabha election performance of Doordarshi Party in Gujarat". India Votes.