தெக்குபட்டு ராமன் கேசவன்

இந்தியத் தொழிலதிபர்

தெக்குபட்டு ராமன் கேசவன் (Thekkepat Raman Kesavan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வாகனப் பொறியாளர் ஆவார். பேச்சாளராகவும் தேசிய மற்றும் பன்னாட்டு மேடைகளில் ஒரு வழிகாட்டியாகவும் இயங்குகிறார். சென்னை தொழில் வர்த்தக சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக உள்ளார்.[1][2][3] இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிலுள்ள தேசிய விவசாயக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[4][5]

கிளின்டன் அறக்கட்டளை மற்றும் அமெரிக்க -இந்திய வர்த்தக சபை ஆகியவற்றுடன் இணைந்து விவசாய ஒத்துழைப்பு கொள்கை உருவாக்கத்தில் கேசவன் பணியாற்றியுள்ளார்.[6][7][8] ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற் திட்டத்தின் இந்திய அமைப்பில் இயக்குநராகவும் இந்தியாவின் வாகன ஆராய்ச்சி சங்கத்தின் ஆளும் குழு உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.[9][10]

2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் "இழுவைவண்டி மற்றும் இயந்திரமயமாக்கல் சங்கத்தின்" தலைவராக கேசவன் நியமிக்கப்பட்டார்.[11][12] 2013 ஆம் ஆண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலின் வளர்ச்சிக்கான உத்திகள் குறித்த உலகப் பணிக்குழுவில் உறுப்பினர் ஆனார். இழுவைவண்டி மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் குழுத்தலைவர் மற்றும் முதன்மை இயக்கு அலுவலர் பதவிகளிலும் பொறுப்பு வகித்தார்.[13] மேலும் இந்நிறுவனத்தின் பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் அரசாங்க குழுக்களில் இவர் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[14][15]

2022 ஆம் ஆண்டில் கேசவன் சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

[16]

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bureau, The Hindu (29 September 2022). "MCCI celebrates its 186th Chamber Day". The Hindu (in Indian English).
  2. Kabirdoss, Yogesh. "Madras Chamber of Commerce and Industry gets new office-bearers | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  3. "The Madras Chamber of Commerce & Industry". www.madraschamber.in.
  4. "FICCI". ficci.in.
  5. "Tamil Nadu expects GSDP to grow 14% in FY23: MCCI". .psuconnect.in (in ஆங்கிலம்).
  6. Bureau, The Hindu (29 September 2022). "MCCI celebrates its 186th Chamber Day". The Hindu (in Indian English).
  7. Kabirdoss, Yogesh. "Madras Chamber of Commerce and Industry gets new office-bearers | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  8. "The Madras Chamber of Commerce & Industry". www.madraschamber.in.
  9. "FICCI". ficci.in.
  10. "Tamil Nadu expects GSDP to grow 14% in FY23: MCCI". .psuconnect.in (in ஆங்கிலம்).
  11. "Interview with T.R. Kesavan". MotownIndia.com (in ஆங்கிலம்).
  12. Sally, Madhvi. "Expected good harvest seen boosting demand for tractors and harvesting machines". The Economic Times.
  13. "CII Southern Region". www.cii.in. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  14. "TAFE4". thehinduimages. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  15. "Mr TR Kesavan, Chair, FICCI National Agriculture Committee & Group President" (in ஆங்கிலம்). FICCI.[self-published]
  16. "T R Kesavan elected President, MCCI; Ramkumar Shankar Vice-Prez - Times of India". The Times of India (in ஆங்கிலம்).