தெந்திரோபியம் கிறித்தியானம்
தெந்திரோபியம் கிறித்தியானம் (தாவர வகைப்பாட்டியல்: Dendrobium christyanum என்பது சீனத் தீவான கைனானுக்குச் சொந்தமான பூஞ்செடி (ஆர்க்கிடேசி) இனமாகும். [4] [5]
தெந்திரோபியம் கிறித்தியானம் | |
---|---|
Dendrobium christyanum | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | D. christyanum
|
இருசொற் பெயரீடு | |
Dendrobium christyanum Rchb.f.[2] | |
வேறு பெயர்கள் [3] | |
|
இது பிற தாவர இனங்களில் பதிவு செய்யப்படாத ஒரு ஆவியாகும் கரிமச் சேர்மத்தை உருவாக்குகிறது. இந்த பூஞ்செடியின் பூக்கள் ஒரு தேனீ புற இசைமம் அல்லது தூண்டல் இசைமத்தை(பெரோமோனை) உருவாக்குகின்றன, இது அதன் பொலன்(மகரந்தச்) சேர்க்கையை ஈர்க்கிறது. வெசுப்பா பைகலர், கார்னெட் இனங்களில் 2009 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் புதுக்கூறு , உள்நாட்டு ஆசிய தேனீ அபிசு செரானாவின் (கைனானில் இயற்கையாக நிகழாத, ஐரோப்பிய அபிஸ் மெல்லிஃபெராவில் உள்ள அதே வேதிமம்) கட்டுபாட்டுப் புற இசைமத்தை ஒப்புருவாக்கும் என்று கருதப்படுகிறது. வேதிச் சேர்மம், (Z)-11-eicosen-1-ol, கார்னெட் மூலம் கண்டறியப்படலாம் மற்றும் இந்த பாவனை பூச்சியை வெகுமதியின்றி பூவைப் பார்வையிடும்படி ஏமாற்றுகிறது (பூக்கள் தேன் வழங்குவதில்லை). V. பைகலர் தேனி இனம் தன் இளவுயிரிகளுக்கு உணவளிக்க தேனீக்களை வேட்டையாடுகிறது. தேனீக்களை வேட்டையாடும் போது ஐரோப்பியப் பீவூல்ஃப் இனமும் ( Philanthus triangulum ) இந்தச் சேர்மத்தைக் கண்டறிய முடிகிறது. [6]
குறிப்புகள்
தொகு- ↑ China Plant Specialist Group. 2004. Dendrobium sinense. The IUCN Red List of Threatened Species 2004. Downloaded on 11 September 2015.
- ↑ "Dendrobium christyanum". ipni.org. International Plant Names Index. பார்க்கப்பட்ட நாள் 2018-11-12.
- ↑ "Dendrobium christyanum Rchb.f." Plants of the World Online. Royal Botanical Gardens Kew. பார்க்கப்பட்ட நாள் 2018-11-18.
- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ Flora of China v 25 p 392, 华石斛 hua shi hu, Dendrobium sinense Tang & F. T. Wang, Acta Phytotax.
- ↑ Orchid Mimics Honey Bee Alarm Pheromone in Order to Attract Hornets for Pollination, Current Biology, Volume 19, Issue 16, 1368 – 1372, 6 August 2009, எஆசு:10.1016/j.cub.2009.06.067