தென்மண்டல கலாச்சார மையம்

தென் மண்டல பண்பாட்டு மையம் (South Zone Cultural Centre) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள பண்பாட்டு மையம் ஆகும். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல பிராந்திய பண்பாட்டு மையங்களில் தென் மண்டல பண்பாட்டு மையமும் ஒன்றாகும்.[1][2]

நோக்கம் தொகு

மண்டலத்தின் பூர்வீக பண்பாட்டை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுவரவும், அவர்கள் நம் நாட்டின் பண்பாட்டை புரிந்துகொள்வத்யையும் அனுபவிப்பதையும் நோக்கமாக கொண்டு இம்மையம் நிறுவப்பட்டது. நாட்டின் கலாச்சார விழுமியங்கள் மற்றும் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமாகவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது. நாட்டியம், நாடகம், இசை மற்றும் கலை அனைத்தையும் ஒருங்கிணைத்து நமது பண்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் உருவாக்க வேண்டும். இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

பணிகள் தொகு

தென்மண்டல கலாச்சார மையத்தின் பணியாவது

  • இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பது ஆகும்

நிர்வாகம் தொகு

இந்தியாவின் ஏழு கலாச்சார மண்டல மையங்களில் ஒன்றான தென்மண்டல கலாச்சார மையத்திற்கு தேவையான முறையான நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற கலாச்சார மண்டல மையங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "South Zone Cultural Centre", szccindia.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21
  2. "About us", szccindia.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21