தென் சென்னை மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தென் சென்னை மக்களவைத் தொகுதி (Chennai South Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 3வது தொகுதி ஆகும்.

தென் சென்னை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தென் சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்19,36,209[1]
சட்டமன்றத் தொகுதிகள்22. விருகம்பாக்கம்
23. சைதாபேட்டை
24. தியாகராய நகர்
25. மைலாப்பூர்
26. வேளச்சேரி
27. சோழிங்கநல்லூர்

தொகுதி மறுசீரமைப்பு தொகு

2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இத்தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றன.

சட்டமன்ற தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. விருகம்பாக்கம்
  2. சைதாபேட்டை
  3. தியாகராய நகர்
  4. மைலாப்பூர்
  5. வேளச்சேரி
  6. சோழிங்கநல்லூர்

வென்றவர்கள் தொகு

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1957 டி. டி. கிருஷ்ணமாச்சாரி இதேகா பி.பாலசுப்பிரமணிய முதலியார் சுயேச்சை
1962 நாஞ்சில் கி. மனோகரன் திமுக சி. ஆர். இராமசாமி இதேகா
1967 பேரறிஞர் அண்ணா திமுக கே. குருமூர்த்தி இதேகா
1967 (இடைத்தேர்தல்) முரசொலி மாறன் திமுக சி. ஆர். இராமசாமி இதேகா
1971 முரசொலி மாறன் திமுக நரசிம்மன் சுதந்திராக் கட்சி
1977 இரா. வெங்கட்ராமன் இதேகா முரசொலி மாறன் திமுக
1980 இரா. வெங்கட்ராமன் இந்திரா காங்கிரசு ஈ. வி. கே. சுலோச்சனா சம்பத் அதிமுக
1984 வைஜயந்திமாலா பாலி இதேகா இரா. செழியன் ஜனதா கட்சி
1989 வைஜயந்திமாலா பாலி இதேகா ஆலடி அருணா திமுக
1991 ஆர். ஸ்ரீதரன் அதிமுக த. ரா. பாலு திமுக
1996 த. ரா. பாலு திமுக எச். கணேசம் அதிமுக
1998 த. ரா. பாலு திமுக ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக
1999 த. ரா. பாலு திமுக வி.தண்டாயுதபாணி இதேகா
2004 த. ரா. பாலு திமுக பதர் சயீது அதிமுக
2009 சி. ராஜேந்திரன் அதிமுக ஆர். எஸ். பாரதி திமுக
2014 ஜே. ஜெயவர்த்தன் அதிமுக டி. கே. எஸ். இளங்கோவன் திமுக
2019 தமிழச்சி தங்கப்பாண்டியன்[2] திமுக ஜே. ஜெயவர்த்தன் அதிமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை தொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 9,00,950 8,94,141 313 17,95,404 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 9,61,904 9,73,934 371 19,36,209 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

வாக்குப்பதிவு சதவீதம் தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 62.66% - [4]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 60.37% 2.29% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019) தொகு

இத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜே. ஜெயவர்த்தனை, 26,2223 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[5]

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
தமிழச்சி தங்கப்பாண்டியன்   திமுக 1632 5,64,872 50.17%
மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன்   அதிமுக 497 3,02,649 26.88%
ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப - ஓய்வு)   மக்கள் நீதி மய்யம் 131 1,35,465 12.03%
ஏ. ஜே. ஷெரின்   நாம் தமிழர் கட்சி 66 50,222 4.46%
ஈ. சுப்பைய்யா   அமமுக 40 29,522 2.62%
நோட்டா - - 53 16,891 1.5%

வாக்காளர் புள்ளி விவரம் தொகு

ஆண் பெண் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு தொகு

2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014) தொகு

அதிமுகவின் மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன், திமுகவின் டி. கே. எஸ். இளங்கோவனை, 1,36,625 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[6]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மருத்துவர் ஜே. ஜெயவர்த்தன் அதிமுக 4,38,404
டி. கே. எஸ். இளங்கோவன் திமுக 3,01,779
இல. கணேசன் பாஜக 2,56,786
எஸ். வி. ரமணி இதேகா 24,420

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009) தொகு

43 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சி. இராஜேந்திரன், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாரதியை, 33,935 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. இராஜேந்திரன் அதிமுக 3,08,567
பாரதி திமுக 2,75,632
வி. கோபிநாத் தேமுதிக 67,291
இல. கணேசன் பாஜ‌க 42,925
சரத்பாபு சுயேச்சை 15,885
இராமசாமி @ டிராபிக் இராமசாமி சுயேச்சை 1,693

14 ஆவது மக்களவை தேர்தல் (2004) தொகு

திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த த. ரா. பாலு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பதர் சயீதை, 2,20,740 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக த.இரா. பாலு 5,64,578.
அதிமுக பதர் சயீத் 3,43,838.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு