தெலூரோபிசுமத்தைட்டு
தெலூரோபிசுமத்தைட்டு (Tellurobismuthite) என்பது Bi2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தெலூர்பிசுமத்து என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தெலூரைடு வகை கனிமமான இது முக்கோண அமைப்பில் படிகமாகிறது. (0001) திசையில் இயற்கையான பிளவு தளங்கள் உள்ளன, ஏனெனில் அந்த தளங்களில் படிகம் திறம்பட அடுக்குகளாக உள்ளது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 - 2 என்ற கடினத்தன்மையும் 7.815 என்ற ஒப்படர்த்தியும் தெலூரோபிசுமத்தைட்டு கனிமம் பெற்றுள்ளது. மந்தமான சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. புதிய பிளவு தளங்களில் ஒரு சிறந்த பளபளப்பை இக்கனிமம் வெளிப்படுத்துகிறது.
தெலூரோபிசுமத்தைட்டு Tellurobismuthite | |
---|---|
தெலூரோபிசுமத்தைட்டு. மேற்கு மற்றும் உட்புற பின்லாந்தில் கிடைத்த கனிமம். | |
பொதுவானாவை | |
வகை | சல்பைட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Bi2Te3 |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் ஈயச் சாம்பல்; வெண்மை |
படிக இயல்பு | ஒழுங்கற்ற தகடுகள் |
படிக அமைப்பு | முக்கோணம் |
பிளப்பு | {0001} இல் தெளிவு = |
விகுவுத் தன்மை | நெகிழும்,பிரிக்கலாம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1.5 – 2 |
மிளிர்வு | உலோகத் தன்மை |
கீற்றுவண்ணம் | ஈயச் சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.815 |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெலூரோபிசுமத்தைட்டு கனிமத்தை Tbi[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பு
தொகுமுதன்முதலில் 1815 ஆம் ஆண்டில் தெலூரோபிசுமத்தைட்டு கண்டறியப்பட்டது. நார்வே நாட்டின் டெலிமார்க்கு மாகாணத்தில் உள்ள தோக்கு ஏரி, நியூ மெக்சிகோவின் சில்வியா மாவட்டம் இதால்கோ மாகாணம் லிட்டில் மில்ட்ரெட்டு சுரங்கம், சியார்ச்சியாவின் இலம்ப்கின் மாகாணம் தாலோநேகாவின் போலி பீல்டு சுரங்கம் ஆகிய பகுதிகளீல் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறைந்த கந்தக நீர்வெப்ப தங்க-குவார்ட்சு விளிம்புகளில் தெலூரோபிசுமத்தைட்டு தோன்றுகிறது. தாயகத் தங்கம், தாயக பிசுமத்து, தங்க டெல்லூரைடுகள், டெட்ராடைமைட்டு, அல்டைட்டு, சால்கோபைரைட்டு மற்றும் பைரோடைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து இது காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Tellurobismuthite data on Webmineral
- ↑ 2.0 2.1 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (2005). "Tellurobismuthite" (PDF). Handbook of Mineralogy. Mineral Data Publishing. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- D. M Chizhikov and V. P. Shchastlivyi, 1966, Tellurium and Tellurides, Nauka Publishing, Moscow