தெ. ரா. கேசவன்

இந்தியத் தொழில் முனைவோர்

தெக்கேபட்டு ராமன் கேசவன் (Thekkepat Raman Kesavan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வாகனப் பொறியாளர் ஆவார். பேச்சாளராகவும் தேசிய மற்றும் பன்னாட்டு மேடையில் ஒரு வழிகாட்டியாகவும் இயங்கி வருகிறார். சென்னை தொழில் வர்த்தக சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும் உள்ளார். [1] [2] இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய விவசாயக் குழுவின் தலைவராகவும்[3] செயல்படுகிறார்.

கல்வி மற்றும் தொழில் தொகு

கேசவன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் சிம்பயோசிசு பன்னாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை ஆசிரியராக கற்பிக்கிறார்.[4]

தெ. ரா.கேசவன், கிளின்டன் அறக்கட்டளை மற்றும் அமெரிக்க-இந்திய வர்த்தக மன்றம் ஆகியவற்றுடன் விவசாய ஒத்துழைப்புக் கொள்கை வகுப்பில் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். [5] [6]

இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் [7] ஆளும் குழுவின் உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயல் திட்டத்தின் இயக்குநராகவும் உள்ளார். [8]

2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் கேசவன் "இழுவை இயந்திரம் மற்றும் இயந்திரமயமாக்கல் சங்கத்தின்" தலைவராக நியமிக்கப்பட்டார். [9] [10] 2013 ஆம் ஆண்டில் கேசவன் போலோக்னா என்ற வேளாண்மை அமைப்பில் உறுப்பினரானார். [11]

இழுவை இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் குழுமத் தலைவராகவும் முதன்மை இயக்கு அலுவலராகவும் பொறுப்பு வகிக்கிறர். [12] அவர் பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் அரசாங்க குழுக்களில் இழுவை இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [13] [14]

2022 ஆம் ஆண்டில் தெ. ரா. கேசவன் சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [15]

மேற்கோள்கள் தொகு

  1. Kabirdoss, Yogesh. "Madras Chamber of Commerce and Industry gets new office-bearers | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  2. "The Madras Chamber of Commerce & Industry". www.madraschamber.in.
  3. "FICCI". ficci.in.
  4. "TMA appoints T R Kesavan as President, Avinash Patankar as VP at AGM". Indiainfoline.com (in ஆங்கிலம்).
  5. "USIBC concludes 'Agriculture Modernization Mission to India'". ANI News (in ஆங்கிலம்).
  6. "West Coast Digital Summit" (in கேட்டலான்). US-India Business Council.
  7. "The Automotive Research Association of India" (PDF). ARAI India.
  8. "Tractor Manufacturers Association". www.tmaindia.in.
  9. "Interview with T.R. Kesavan". MotownIndia.com (in ஆங்கிலம்).
  10. Sally, Madhvi. "Expected good harvest seen boosting demand for tractors and harvesting machines". The Economic Times.
  11. "Club of Bologna: a world TASK-FORCE on strategies for the Development of Agricultural Mechanisation". www.clubofbologna.org.
  12. "CII Southern Region". www.cii.in. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
  13. "TAFE4". thehinduimages. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
  14. "Mr TR Kesavan, Chair, FICCI National Agriculture Committee & Group President" (in ஆங்கிலம்). FICCI.
  15. "T R Kesavan elected President, MCCI; Ramkumar Shankar Vice-Prez - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._ரா._கேசவன்&oldid=3585750" இலிருந்து மீள்விக்கப்பட்டது