தேங்காய்

தென்னைமரத்தின் பழம் ஆகும்

தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கு + "காய்" = தேங்காய் (நன்னூல்.187) என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும் பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பதுதான் தேங்காய். அந்தத் தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்தக் கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்குப் பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். கோடை காலங்களில் வெயிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர்.

தென்னை மரத்தில் தேங்காய்க் குலை
புறப்பட்டையை உரித்த தேங்காய்
தேங்காய் திருவும் ஆங்கிலச் சிறுவர்கள்


பெயர்க்காரணம்

தொகு

Coconut என்னும் மரம் இந்தோனேசியா தீவுகளில் இருந்து இலங்கை ஊடாக தமிழ்நாடு மற்றும் கேரளக் கடற்கரையை அடைந்தது. எனவே , அது தென்காய் என்று விளிக்கப்பட்டது.

தென்+காய் = தென்காய் ( தென்னக்காய் )

தென்காய்  => தெங்காய் => தெங்குகாய் => தேங்காய்

கொப்பரை

தொகு

தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயைக் கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரைத் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.

சமையல்

தொகு

தேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதைக் குழம்பில் மசாலாவுடன் சேர்த்துச் சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது.

Coconut, meat, raw
உணவாற்றல்1481 கிசூ (354 கலோரி)
15.23 g
சீனி6.23 g
நார்ப்பொருள்9.0 g
33.49 g
3.3 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(6%)
0.066 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.02 மிகி
நியாசின் (B3)
(4%)
0.54 மிகி
(6%)
0.300 மிகி
உயிர்ச்சத்து பி6
(4%)
0.054 மிகி
இலைக்காடி (B9)
(7%)
26 மைகி
உயிர்ச்சத்து சி
(4%)
3.3 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
14 மிகி
இரும்பு
(19%)
2.43 மிகி
மக்னீசியம்
(9%)
32 மிகி
பாசுபரசு
(16%)
113 மிகி
பொட்டாசியம்
(8%)
356 மிகி
துத்தநாகம்
(12%)
1.1 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்&oldid=3764942" இலிருந்து மீள்விக்கப்பட்டது