தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 (National Curriculum Framework 2005) என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தால் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேசிய அளவிலான கலைத்திட்டங்களுள் ஒன்றாகும். இக்கலைத்திட்ட வடிவமைப்பு, இந்திய அளவில் பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் உருவாக்குவது,புத்தகங்கள் எழுதுவது மற்றும் கற்பித்தல் வழிமுறைகளை நெறிப்படுத்துகிறது[1] இக்கலைத்திட்டம் முந்தைய அரசுகளின் அறிக்கைகள், சுமையற்ற கற்றல் மற்றும் 1986 - 1992 ஆம் ஆண்டுகளின் தேசியக் கல்விக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள்து[2]

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 முக்கிய அம்சங்கள் தொகு

முக்கிய நோக்குகள் தொகு

  1. பள்ளிக்கு வெளியில் கற்ற அனுபவ அறிவை பள்ளியில் கற்ற அறிவுடன் தொடர்புபடுத்துதல்.
  2. குருட்டு மனப்பாடம் செய்வதைத் தவிர்த்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
  3. பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டும் தகவல் திரட்டுதல் மற்றும் படித்தறிதல்.
  4. தேர்வு முறைகளை மேலும் எளிதாக்கியும் நெகிழ்வாக்கியும் வகுப்பறைக் கற்றலுடன் ஒருங்கிணைத்தல்.
  5. குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமைத்திறனை வளர்த்தல்.[3]

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு கவனம் செலுத்தும் பகுதிகள் தொகு

  • சுமையற்ற கற்றல். இது புத்தகச்சுமை எனும் மன அழுத்தத்திலிருந்து குழந்தைகளை விடுபடச்செய்து கற்றல் என்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுகிறது.
  • சமூக உறவுகளின் அடிப்படையிலான சுய-நம்பிக்கை மற்றும் கண்ணியத்தின் உணர்வு மற்றும் சமூகத்தில் அகிம்சை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்க்க உதவும்.
  • குழந்தையை மையப்படுத்தி கற்றல் அணுகுமுறையை உருவாக்குதல் மற்றும் 14 வயது வரையிலான குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல்.

கற்றல் மற்றும் அறிவு தொகு

  • கற்றல் ஒரு சுவாரசியமான செயலாக இருக்க வேண்டும், அங்கு குழந்தைகள் மதிப்புக்குரியவர்கள் என்று உணர வேண்டும். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.
  • கலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் பள்ளி ஆகியவை மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க உணர்வை உணர்த்துவதற்காக திருப்திகரமான இடமாக வடிவமைக்கப்பட வேண்டும்.
  • கலைத்திட்டம் மாணவர்களின் உடல் மற்றும் மன ரீதியான வளர்ச்சியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும்.
  • மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெறுவதற்காக, போதியளவு ஊட்டச்சத்து, உடற் பயிற்சி மற்றும் பிற சமூகத் தேவைகளைப் பெற யோகா மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும்.
  • கற்றல் மகிழ்ச்சியாகவும், உண்மையான வாழ்க்கை அனுபவங்களைப் பெற ஆழமான புரிதலுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
  • குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு உள்ளடங்கிய கல்வியும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு கலைத்திட்டத்தைப் பின்பற்றுவதற்கு முன்னுரிமை மற்றும் நெகிழ்வுத்திறன் ஆகியவற்றையும் அளிப்பது.
  • ஆக்கபூர்வமான கற்றல் கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கான சவால்களை வழங்க, சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
  • அடித்தளத்தை மிகவும் வலுவாகவும் உறுதியானதாகவும் வைத்திருக்க வேண்டும். தொடக்கநிலை, உயர் தொடக்கநிலை, இடைநிலை ஆகியவை குழந்தைகளுக்கு அறிவூட்டல் சிந்தனையை ஆராய்வதற்கும், அவற்றில் உட்படுத்துவதற்கும் கருத்துக்கள், விசாரணை மற்றும் சரிபார்த்தல் நடைமுறைகளில் போதுமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.

கலைத்திட்டப் பகுதி, பள்ளி நிலை மற்றும் மதிப்பீடு தொகு

மொழி மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும். பயிற்று மொழி தாய்மொழியாக இருத்தல் வேண்டும்.[4] முதல்மொழியாக தாய்மொழி அல்லது பிராந்திய மொழி அமைய வேண்டும். இரண்டாம் மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் வேறு ஒரு நவீன இந்திய மொழி அல்லது ஆங்கிலம் இருக்கும். இந்தி அல்லாத வேறுமொழி பேசும் மாநிலங்களில் இரண்டாம் மொழி இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும். மூன்றாவது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது இரண்டாம் மொழியாகப் படிக்காத ஒரு நவீன இந்திய மொழி இருக்கும். இந்தி அல்லாத வேறுமொழி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது வேறு ஒரு நவீன இந்திய மொழி இருக்கும்.[4]

பள்ளி மற்றும் வகுப்பறை சூழல் தொகு

உள்கட்டமைப்பு, போதுமான ஒளி மற்றும் மாணவர் ஆசிரியர் விகிதம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான வகையில் மாணவர்களுக்கு சாதகமான சூழலை பராமரிக்க வேண்டும். பள்ளிகள் சமத்துவம், நீதி, மரியாதை மற்றும் அவர்களுக்குரிய உரிமையுடன் மாணவர்களை நடத்த வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் எந்தவித சார்பும் இல்லாமல் எல்லா செயல்பாடுகளிலும் பங்கேற்க சம வாய்ப்புகளை வழங்க வேண்டும். உள்ளடங்கிய கல்வி கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பள்ளிகள் நூலகங்கள், ஆய்வகங்கள் மற்றும் கல்வி தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆகிய வளங்களுடன் இருத்தல் வேண்டும்.[3]

அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தொகு

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 கல்வி முறைமையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக கலைத்திட்டம் கற்போர்மையக் கல்வி, நெகிழ்வான செயல்முறை, கற்பித்தல் தன்னாட்சியை வழங்குகிறது. ஆசிரியர் ஒரு ஊக்கமளிப்பவராக, கற்றலை ஆதரிப்பவராக, ஊக்குவிப்பவராக விளங்குகிறார். பலவகைப்பட்ட பிரிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக கல்விமுறையில் மாறுபட்ட வெளிப்பாடுகளைக் கொண்டு அமைகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Syllabus I-XII
  2. Learning without Burden பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 3.2 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

வெளி இணைப்புகள் தொகு