தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம், புது டில்லி

தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம், புது டில்லி, இந்தியாவின் தலைநகரமான புது டில்லியின் சாணக்கியபுரியில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்தியாவின் தொடர்வண்டிப் போக்குவரத்து தொடர்பான இந்த அருங்காட்சியகம் 1977 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் தேதி அமைக்கப்பட்டது. 10 ஏக்கர் (40,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் கட்டிடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காட்சிப் பொருள்களைக் கொண்டுள்ளது.

பட்டியாலா ஒற்றைத் தண்டவாளத் தொடர்வண்டி

முக்கியமான காட்சிப் பொருட்கள் தொகு

தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகத்தில் இந்தியாவில் தொடர்வண்டிப் போக்குவரத்தின் வரலாற்றை விளக்கும் பல காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமான சில பின்வருமாறு:

  • ஃபெயரி குயீன்: இயங்கும் நிலையில் உள்ள உலகின் மிகப்பழைய தொடர்வண்டி இழுபொறி இதுவாகும். 1855 ஆம் ஆண்டில் உற்பத்தியான இது நீராவியால் இயங்கக்கூடியது.
  • பட்டியாலா ஒற்றைத் தண்டவாளத் தொடர்வண்டி: தனித்துவமான இந்தத் தொடர்வண்டி 1907 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. எவிங் முறையில் இயங்கும் இந்தத் தொடர்வண்டி ஒன்றுக்கொன்று 6 மைல் தூரத்தில் அமைந்த பாசி, சிர்ஹிந்த் என்னும் இரு இடங்களை இணைத்தது.

மேலும் காண்க தொகு

வெளியிணைப்புக்கள் தொகு