தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்

(தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.[1] தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "தொழிலாளர் பாதுகாப்பு தேசிய தினம் - மார்ச் 4". http://www.nithimuthaleedu.co.in/2013/01/4_16.html. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)