தேசிய நாள் (சிங்கப்பூர்)
சிங்கப்பூரின் தேசிய நாள் (National Day of Singapore) ஆண்டுதோறும் ஆகத்து 9 ஆம் நாள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்றதை நினைவுகூரும் நாள் ஆகும். இவ்விடுமுறை நாளில் தேசிய நாள் அணிவகுப்பு. பிரதமரின் உரை, வான வேடிக்கைகள் ஆகியன் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.
தேசிய நாள் National Day | |
---|---|
2011 தேசிய நாளில் இடம்பெற்ற வாண வேடிக்கைகள் | |
அதிகாரப்பூர்வ பெயர் | சிங்கப்பூர் தேசிய நாள் National Day of Singapore |
கடைபிடிப்போர் | சிங்கப்பூர் |
வகை | தேசியம் |
முக்கியத்துவம் | 1965 இல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை அடைந்த நாள் |
கொண்டாட்டங்கள் | தேசிய நாள் இராணுவ அணிவகுப்பு, சிங்கப்பூரின் பிரதமர் உரை, வாண வேடிக்கைகள் |
நாள் | 9 ஆகத்து |
நிகழ்வு | ஆன்டு தோறும் |
தேசிய நாள் அணிவகுப்பு
தொகுசிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு என்பது ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வணிவகுப்பு பொதுவாக மரீனா விரிகுடா, சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் உள்ள தேசிய அரங்கம் அல்லது பதாங்கு ஆகிய இடங்களில் ஒன்றில் நடைபெறும். 2007 ஆம் ஆண்டில், அணிவகுப்பு முதல் முறையாக மெரினா விரிகுடாவில் உள்ள மிதக்கும் அரங்கில் நடைபெற்றது, 2016 ஆம் ஆண்டில் இது சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. அணிவகுப்பில் அவ்வாண்டின் கருப்பொருளை விளக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
தேசிய நாள் உரை
தொகுதேசிய தின உரை 1966 முதல் ஆன்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர் பிரதமர் தனது பதிவுசெய்யப்பட்ட செய்தியில், "உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை ஆராய்வது, பொருளாதார செயல்திறனை மதிப்பாய்வு செய்தல், தேசிய முன்னுரிமைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்களை கோடிட்டுக் காட்டுவது, சிங்கப்பூரர்கள் ஒரு ஒருங்கிணைந்த நோக்கத்துடன் முன்னேறல்", போன்றவற்றைக் கோடிட்டுக் காட்டுவார்.[1]
தேசிய நாள் பேரணி
தொகுதேசிய தினத்திற்கு அடுத்து வரும் 2-வது/3-வது ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூரின் பிரதமர் நாட்டு மக்களுக்கு தனது வருடாந்த உரையை நிகழ்த்துவார். இது அங்கு தேசிய தினப் பேரணி என அழைக்கப்படுகிறது. 1966 முதல் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இப்பேரணியை பிரதமர் தனது அரசின் முக்கிய சவால்கள் மற்றும் அதன் எதிர்கால திசைகள் குறித்து உரையாற்ற பயன்படுத்துகிறார். பிரதமரின் உரைகள் மலாய், சீன மொழிகளிலும், ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் இடம்பெறுகின்றன. 2007 ஆம் ஆன்டு முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இப்பேரணிக்கு அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Day Messages". Archives Online. 7 August 2018.