தேசிய மின்வழி நிதி மாற்றம்

தேசிய மின்வழி நிதி மாற்றம் (National Electronic Funds Transfer, NEFT) இந்தியாவின் மின்வழி நிதி மாற்ற அமைப்புக்களில் முதன்மையானவற்றில் ஒன்றாகும். நவம்பர் 2005இல் துவங்கப்பட்ட இச்சேவை[1] வங்கிப் பயனர்கள் தங்கள் நிதியை எளிதாகவும் பாதுகாப்பாகவும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வசதியை அளித்தது. இது ஆர்டிசிஎசு போல நிகழ்நேரத்தில் நடப்பதில்லை. இது ஒவ்வொரு மணிக்கொருமுறை தொகுதியாக நிகழ்த்தப்படும் "நிகர" மாற்றுகை வசதியாகும். இதனால் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கால இடைவெளி ஏற்படும். தவிரவும் இது வங்கி அலுவலகப் பணிநேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் 30,0000 வங்கிக் கிளைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கிற்கு இணைய அணுக்கம் உள்ளவர்கள் தாங்களாகவே மற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்ற இயலும்; பெறுநரின் பெயர், வங்கிக் கணக்கு எண், பெறுநர் வங்கியின் இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு தெரிந்திருக்க வேண்டும்.

செயற்படுத்த மிகவும் எளிமையாக இருப்பதாலும் நேரம் மிச்சப்படுத்தப்படுவதாலும் இச்சேவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. 2008ஆம் ஆண்டின் நிதி மாற்றுகைகளில் 42% தேசிய மின்வழி நிதி மாற்றம் மூலமாக நடந்துள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Overview of Payment Systems in India". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.

வெளி இணைப்புகள்

தொகு