தேனீ ஒலி உணரும் கருவி

ஏப்பிடிக்டர் (Apidictor) எனும் தேனீ ஒலி உணரும் கருவி தேனீக்களின் கூடுகளில் உள்ள ஒலியை அளவிடுவதற்கும் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். தேனீக்களின் இறக்கைகள் அசைப்பதன் மூலம் ஏற்படும் மொத்த ஒலியை இந்த கருவி பதிவு செய்கிறது. மேலும் ஒரு கூட்டமைவு மெய்த்திரள் ஓட்டத்திற்குத் திரளத் தயாராகுவதைக் கண்காணிக்க இது உதவும்.[1]

பிபிசி ஒலி பொறியாளர் எட்வர்ட்டு பாரிங்டன் வூட்சால் இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. 1952-இல் இதற்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Boys, T.R. "Apidictor". Beesource.com. Archived from the original on 2005-07-17.
  2. [1], "Means for detecting and indicating the activities of bees and conditions in beehives" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_ஒலி_உணரும்_கருவி&oldid=3993153" இலிருந்து மீள்விக்கப்பட்டது