தேனீ வளர்ப்பு, தேனீச்சிகிச்சைக்கான பசுகிர் அறிவியல் ஆராய்ச்சி மையம்

தேனீ வளர்ப்பு, தேனீச்சிகிச்சைக்கான பசுகிர் அறிவியல் ஆராய்ச்சி மையம் (Bashkir Scientific Research Center for Beekeeping and Apitherapy) என்பது உருசியாவில் பசுகோர்டோசுதான் குடியரசின் உபாவை தளமாகக் கொண்ட ஒரு பசுகிரியன் மாநில முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது தேனீ வளர்ப்பில் மற்றும் தேனீச்சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றது.[1][2] இந்த நிறுவனம் 1998ஆம் ஆண்டில் அமீர் இசோம்குலோவ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த மையத்தில் 200 வகையான மருத்துவ மற்றும் தடுப்பு, ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[3]

இந்த மையம் உயர்தர மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகப் பாதுகாப்பான பசுகிரியன் தேன் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனமாகும்.[4] இந்த மையம் மட்டுமே "பசுகிர் தேன்" உற்பத்தி உரிமைப் பெற்ற ஒரே நிறுவனம் ஆகும்.[5]

2005 முதல் இந்த மையம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்குத் தேனை ஏற்றுமதி செய்து வருகிறது.[6][7][8] இந்த மையம் ஆசியாவிற்கும் தேனை ஏற்றுமதி செய்கிறது. [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bashkirian honey - Export abilities of Bashkortostan". Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  2. "Межвузовская студенческая" (PDF). www.rea.perm.ru.
  3. "Bashkortostan". 14 February 2013.
  4. "Bee Garden – White Murcery LLC – Bashkirian Honey". Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  5. "State Establishment Bashkirian Scientific Research Center on Beekeeping and Apitherapy". Archived from the original on 2018-09-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  6. "Bashkirian honey - Export abilities of Bashkortostan". Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  7. "KTRB". ktrb.ru. பார்க்கப்பட்ட நாள் 2024-02-23.
  8. "Bashkir honey will be sold in retail chains of New York - Правительство Республики Башкортостан". Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  9. "Bashkortostan". 14 February 2013.

வெளி இணைப்புகள்

தொகு