தேன்குட எறும்பு

தேன்குட எறும்புகள் (Honeypot ants) என்பன தேன் எறும்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறப்பு வேலையாட்களைக் கொண்ட எறும்புகளாகும் (ரிப்லெட்கள்,[1] பிளெர்கேட்கள் அல்லது சுழல்கள்) இவை இவற்றின் வயிறு பெரிதாக வீங்கும் அளவிற்கு உணவை எடுத்துக்கொள்கின்றன. பிற எறும்புகள் உணவுப்பரிமாற்ற செயல்முறை மூலம் வேலைக்கார எறும்புகளிடமிருந்து உணவினைப்பெறுகின்றன.[2] இவை வாழும் லார்டர்களாக செயல்படுகின்றன. தேன்குட எறும்புகள் மைர்மெகோசிசுடசு மற்றும் காம்போனோடசு பேரினங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவை. இவை முதன்முதலில் 1881-ல் என்றி சி. மெக்கூக்கால் ஆவணப்படுத்தப்பட்டன.[3][4] மேலும் 1908-ல் வில்லியம் மார்டன் வீலரால் விவரிக்கப்பட்டது.[5]

மைர்மெகோசிசுடசு தேன்குட எறும்புகளில், தேனைச் சேமிப்பதற்காக வீங்கியிருக்கும் பகுதியுடன் சிறப்பு வேலைக்கார எறும்புகள்

நடத்தை

தொகு

பல பூச்சிகள், குறிப்பாகத் தேனீக்கள் மற்றும் சில குளவிகள், பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காகத் திரவத்தைச் சேகரித்துச் சேமிக்கின்றன. இருப்பினும், இந்தப் பூச்சிகள் தங்கள் உணவைத் தங்கள் கூட்டில் அல்லது தேனடைகளில் சேமித்து வைக்கின்றன. ஆனால் தேன் எறும்புகள் தங்களுடைய உடல் பகுதிகளையே உணவுச் சேமிப்பிற்காகப் பயன்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவை. பின்னர் உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது சக எறும்புகளால் இவைப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தேன் எறும்பின் உடலின் உள்ளே சேமிக்கப்படும் திரவம் தேவைப்படும்போது, வேலையாட்கள் எறும்புகளின் உணர் கொம்புகளைத் தாக்கி, தேன்குட எறும்பின் தீனிப்பையில் சேமித்து வைக்கப்பட்ட திரவத்தை மீளப்பெறச் செய்கிறது.[5][6]

உடற்கூறியல்

தொகு
 
மனித கையுடன் ஒப்பிடும்போது தேன்குட எறும்புகள். இருண்ட முதுகுப்புற வன்தகடுகள் ஒவ்வொரு நிரப்பியின் வீக்கமடைந்த அடிவயிற்றின் நீட்டப்பட்ட மூட்டு இணைப்புச் சவ்வு மூலம் பரவலாக பிரிக்கப்படுகின்றன.

காம்போனோடசு இன்ப்ளாட்டசு போன்ற உயிரினங்களின் அடிவயிறு மென்மையான, அதிக நெகிழ்வான மூட்டு இணைப்புச் சவ்வு மூலம் இணைக்கப்பட்ட கடினமான முதுகுபுற வன்தகடுகளைக் கொண்டுள்ளது. வயிறு காலியாக இருக்கும்போது, மூட்டுச் சவ்வு மடிந்து, வன்தகடுகள் ஒன்றுடன் ஒன்று சேரும். ஆனால் அடிவயிற்றை நிரப்பும் போது மூட்டுச் சவ்வு முழுமையாக நீட்டப்பட்டு, வன்தகடுகள் பரவலாகப் பிரிக்கப்படும்.[7]

சூழலியல்

தொகு

மிர்மெகோசிசுடசு கூடுகள் வறண்ட அல்லது பகுதி வறண்ட சூழல்களில் காணப்படுகின்றன. சில சிற்றினங்கள் மிகவும் வெப்பமான பாலைவனங்களில் வாழ்கின்றன, மற்றவை இடைநிலை வாழ்விடங்களில் வாழ்கின்றன. இன்னும் சில சிற்றினங்கள் வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஓரளவு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் ஆண்டின் பெரும்பகுதிக்கு மிகவும் வறண்டவை. உதாரணமாக, மிர்மெகோசிசுடசு மெக்சிகனசு தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட வாழிடங்களில் வாழ்கிறது. இந்த சிற்றினத்தில் உள்ள மலட்டுத் வேலைக்கார எறும்புகள் உணவுப் பற்றாக்குறையின் போது பிளெர்கேட்டுகளாக அல்லது நிரப்பிகளாக செயல்படுகிறார்கள். பிளெர்கேட்டுகள் முழுமையாக நிரப்பியிருக்கும் போது, அசைவற்று, நிலத்தடி கூடுகளின் கூரையில் தொங்கும். மற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பின மற்ற பகுதிகளுக்கு உணவளிக்க தங்கள் திரவ உணவு சேகரங்களிலிருந்து அவற்றை வெளியேற்றும். பிளிரெகேட்சு கூட்டில் எங்கும் வாழலாம். ஆனால் காடுகளில், இவை ஆழமான நிலத்தடியில் காணப்படுகின்றன. நகர முடியாமல், திராட்சை அளவுக்கு வீங்கி இருக்கும்.[8]

ஆத்திரேலியாவில் உள்ள காம்போனோடசு இன்ப்ளாட்டசில், எறும்புகளின் கூட்டமைப்பில் தேனைச் சேகரித்து வைக்கும் எறும்புகள் அதிக எண்ணிக்கையில் (49% 516 எறும்புகள் 1835 எறும்பு கூட்டமைப்பில்), 46% (1835 எறும்புகள் 4019 எறும்பு கூட்டமைப்பில்) காணப்படுகின்றன. சிறிய கூட்டமைப்பில் ஆறு இறக்கையற்ற இராணி எறும்புகள் காணப்படும். பெரிய கூட்டமைப்பில் 66 அறைகள் தேன் சேகரிக்கும் வேலைக்கார எறும்புகளுக்காகக் கொண்டிருந்தன. ஒரு அறையில் அதிகபட்சமாக 191 எறும்புகள் காணப்பட்டன. மிகப்பெரிய நிரப்பு அறை 15 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 1.4 கிராம் நிறையுடன் கூடியது. கூட்டின் அதிகபட்ச ஆழம் 1.7 மீட்டர், மற்றும் சுரங்கங்கள் கூடு நுழைவாயிலிருந்து 2.4 மீட்டர் வரை நீண்டு காணப்படும். முல்கா மகரந்தத்திலிருந்து அமிர்தத்தையும், திலிக்கா நீல நாக்கு பல்லியின் சடலத்திலிருந்து இறைச்சியையும் சேகரிப்பதற்காக வேலைக்கார எறும்புகள் பகல் நேரத்தில் உணவு தேடிச் செல்லும்.[9]

பேரினம்

தொகு

தேனைச் சேகரிக்கும் பண்பு பல பருவகால செயலில் உள்ள எறும்பு பேரினங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது:[10]

  • ஆத்திரேலியாவின் காம்போனோடசு[10]
  • வட ஆப்பிரிக்காவின் கேடாக்லிபிசு[10]
  • மெலனேசியாவின் லெப்டோமைர்மெக்சு[10]
  • ஆத்திரேலியாவின் மெலோபோரசு[10]
  • வட அமெரிக்காவின் மிர்மெகோசிசுடசு[10][11]
  • தென்னாப்பிரிக்காவின் பிளாகியோலெபிசு[சான்று தேவை]
  • வட அமெரிக்காவின் ப்ரீனோலெபிசு[10]

மனித கலாச்சாரத்தில்

தொகு

தேன்குட எறும்புகளான மெலோபோரசு பாகோட்டி மற்றும் காம்போனோடசு சிற்றினங்களை. உண்ணக்கூடிய பூச்சிகளாக உள்ளன. இவற்றைப் பல்வேறு ஆத்திரேலியத் தொல்குடிகள் உணவில் அவ்வப்போது ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்கின்றன. இந்த மக்கள் எறும்புகளின் செங்குத்து சுரங்கப்பாதைகளைக் கண்டறிய மேற்பரப்பைத் துடைப்பார்கள். பின்னர் தேன்குட எறும்புகளைக் கண்டுபிடிக்க இரண்டு மீட்டர் ஆழம் வரை தோண்டுவர்.[12] ஆத்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள பபுன்யா, தேன் எறும்புகளின் அடிப்படையில் பெயர் பெற்றனர். வார்ல்பிரி போன்ற மக்களின் கனவுப் பெயரால் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.[13] 1971-ல் வரையப்பட்ட மேற்குப் பாலைவன கலை இயக்கத்தின் சுவரோவியத்தில் தேன் எறும்புகள் முதன்மையாகக் கருதப்பட்டன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Replete". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. பி. மாரியப்பன். 2020. தேன்குட எறும்பு. துளிர், 33(5):17
  3. McCook, Henry C. (1882). The Honey and Occident Ants.
  4. McCook, Henry C. (1907). Nature's craftsmen; popular studies of ants and other insects. pp. 96–111.
  5. 5.0 5.1 Wheeler, William Morton (March 1908). "The Polymorphism of Ants". Annals of the Entomological Society of America 1: 39–69. doi:10.1093/aesa/1.1.39.  (subscription required)
  6. "Honey Ant Adaptations". National Geographic Society. Archived from the original on 20 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Gullan, P. J.; Cranston, P. S. (2009). The Insects: An Outline of Entomology. John Wiley & Sons. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-4457-5.
  8. Conway, John R. (1986). "The Biology of Honey Ants". The American Biology Teacher 48 (6): 335–343. doi:10.2307/4448321. 
  9. Conway, John R. (June 1991). "The biology and aboriginal use of the honeypot ant, 'Camponotus inflatus' Lubbock, in Northern Territory, Australia". Australian Entomologist 18 (2): 49–56. http://search.informit.com.au/documentSummary;dn=108392124224680;res=IELHSS. 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 Schultheiss, P.; Schwarz, S.; Wystrach, A. (2010). "Nest Relocation and Colony Founding in the Australian Desert Ant, Melophorus bagoti Lubbock (Hymenoptera: Formicidae)". Psyche: A Journal of Entomology 2010: 1–4. doi:10.1155/2010/435838. 
  11. Morgan, R. Biology, husbandry and display of the diurnal honey ant Myrmecocystus mendax Wheeler (Hymenoptera: Formicidae) பரணிடப்பட்டது 2010-07-17 at the வந்தவழி இயந்திரம்
  12. "Use of Insects by Australian Aborigines". 2011. Archived from the original on 25 August 2012. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
  13. "Papunya Tula art movement of the Western Desert". Archived from the original on 8 August 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்குட_எறும்பு&oldid=4108652" இலிருந்து மீள்விக்கப்பட்டது