முதன்மை பட்டியைத் திறக்கவும்
பெல்ஜியன் புளூ மாடு. மெல்லிய தசை வளர்ச்சிக் குறைபாடான மியோஸ்டாட்டின் மரபணுவில் உள்ள குறைபாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது
சிஹுவூவா கலப்பினமும் கிரேட் டேன் இனமும் கலந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்பட்ட நாய்.
மக்காச்சோளத்தின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு

தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை அல்லது செயற்கை தேர்வு(Selective breeding) என்பது மனிதர்களால் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட தோற்ற அமைப்புக்குரிய பண்புக்கூறுகளை தேர்ந்தெடுத்து மரபுப்பண்புகளோடு மறு உருவாக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனப்பெருக்கச் செயல்முறையாகும். பொதுவாக வளர்ப்புப் பிராணிகள் எனப்படும் கால்நடை மற்றும் தாவர வளர்ப்புக்கு விலங்குகள் அல்லது தாவரங்களை, ஆண், பெண் இரண்டையும் ஒன்றாக வளர்ப்பதன் மூலம் அவை தானாகவே பாலியல் இனப்பெருக்கம் செய்து சந்ததிகளை உருவாக்கும். இதற்காக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் வளர்ப்புப் பிராணிகள் எனப்படும். இதில் தொழில் முறை வளர்ப்பாளர்கள் ஈடுபடுவார்கள். அதே போல தொழில்முறை வளர்ப்பாளர்களால் வளர்க்கப்படும் தாவர இனங்கள் வீரிய ஒட்டு ரகங்கள் எனப்படும். பொதுவாக இவை தாவரப் பல்வகைமை, பயிரிடு வகைகள் என அழைக்கப்படுகின்றன.

இரண்டு வெவ்வேறு விலங்கினங்களின் இரண்டு தேர்ந்தெடுக்கபட்ட பண்புக்கூறுகள் இணைந்து உருவாகும் புதிய பண்புக்கூறுள்ள விலங்குகள் கலப்பினங்கள் எனப்படுகின்றன. மலர்கள், காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் இவற்றின் வீரிய ஒட்டுரகங்கள், தொழில்சாரா மற்றும் வணிக ரீதியான அல்லது வணிக ரீதியற்ற நிபுணர்களால் உருவாக்கப்படலாம். முக்கிய பயிர்கள் வழக்கமாக தொழில்முறையாளர்களின் தோற்றுவாயாகவே இருக்கின்றன.

கால்நடை வளர்ப்பில் உள்ளினச்சேர்க்கை , வழிவிருத்தி, வேற்றினச் சேர்க்கை ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தாவர வளர்ப்பிலும் இதே போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 1859 ஆம் ஆண்டு வெளிவந்த உயிரினங்களின் தோற்றம் (நூல்) என்ற புத்தகத்தில், மாற்றங்களை உருவாக்குவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எவ்வாறு வெற்றிகரமாக இருந்தது என்பதை சார்லஸ் டார்வின் விவாதிக்கிறார். அந்நூலின் முதல் அத்தியாயத்தில் வீட்டு வளர்ப்பு விலங்குகள் அதாவது புறாக்கள், பூனைகள் , கால்நடை, மற்றும் நாய்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. டார்வின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தவும், ஆதரவளிப்பதற்காகவும் செயற்கைத் தேர்வு ஒன்றைப் பயன்படுத்தினார்.[1]

வேளான்மை மற்றும் உயிரியல் சோதனைகளில் விரும்பும் விளைவை உருவாக்குவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் வேண்டுமென்றே செய்யப்படுகிறது. இது மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எதிர்பாராத விதமாகவும் முடியலாம். பயிர் சாகுபடி முறையின் விளைவாக விரும்பத்தக்க அல்லது விரும்பத்தகாத விளைவுகள் உருவாகி இருக்கலாம் - உதாரணமாக, சில தானியங்களில் விதை அளவை அதிகரிப்பது பெரிய விதைகளை வேண்டுமென்றே தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சில உழுதல் நடைமுறைகள் மூலமே பெரிய விதைகளை உற்பத்தி செய்திருக்கலாம். பெரும்பாலும், தாவர வளர்ப்பில் இயற்கையான மற்றும் செயற்கை காரணிகளுக்கு இடையிலான இடைவிடாத சார்ந்திருத்தல் தன்மை இருந்து வந்துள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. டார்வின்
  2. Purugganan, M. D.; Fuller, D. Q. (2009). "The nature of selection during plant domestication". Nature 457 (7231): 843–8. doi:10.1038/nature07895. பப்மெட்:19212403. Bibcode: 2009Natur.457..843P.