தேவகாந்தாரி

தேவகாந்தாரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

தொகு
 
தேவகாந்தாரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1) பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி23 ரி21 ப த2 நி3 ச்
அவரோகணம்: ச் நி32. ப ம13 ரி2. ச

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருப்பதால் இது ஒரு சம்பூர்ண இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். ஆரோகணத்தில் ரிசபம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Singha, H.S. (2000). The Encyclopedia of Sikhism (over 1000 Entries). Hemkunt Publishers. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7010-301-1. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகாந்தாரி&oldid=4099731" இலிருந்து மீள்விக்கப்பட்டது