தேவார மூவர்

தேவார மூவர் என்பது தேவாரத்தினைப் பாடிய மூன்று நபர்களைக் குறிப்பிடும் சைவசமய சொல்லாக்கமாகும். [1] இவர்களை மூவர், மூவர் முதலிகள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் பாடிய தேவாரத் தொகுப்பினை மூவர் தேவாரம் என்று அழைக்கின்றனர்.

சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர். இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர். திருமுறைகளில் முதல் மூன்றை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர்.

தேவார மூவர் இசைக் கலை விழா தொகு

இராமலிங்கர் பணிமன்றம், நாரத கான சபா ஆகிய இரண்டும் இணைந்து தேவார மூவர் இசைக் கலைவிழாவினை வருடந்தோறும் சென்னையில் நடத்துகின்றன. [2]

தேவார மூவரைப் பற்றிய நூல்கள் தொகு

தேவார மூவர் வாழ்வும் வாக்கும் - புலவர்.வீ.சிவஞானம், விஜயா பதிப்பகம் [3]

ஆதாரங்கள் தொகு

  1. "Saivam - Tamil Virtual University".
  2. http://www.dinamani.com/edition_chennai/chennai/article1160660.ece
  3. http://marinabooks.com/detailed?id=9068[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவார_மூவர்&oldid=3369862" இலிருந்து மீள்விக்கப்பட்டது