தேவி தாசு நாகர்
தேவி தாசு நாகர் (Devi Das Nahar) இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வால்மீகி ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் வால்மீகி தரம் யுத் மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார். [3]
தேவி தாசு நாகர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமிர்தசரசு, பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வேலை | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுபஞ்சாபின் அமிர்தசரசு பகுதியில் செயலில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பிளவுபட்ட குழுவான பகுஜன் சமாச் கட்சியின் (அம்பேத்கர்) தலைவராக இவர் உள்ளார்.[4][5] 2002 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாச்சு கட்சியின் அம்பேத்கார் பிரிவு தேர்தலில் போட்டியிட 23 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் இணைந்து 20,260 வாக்குகளைப் பெற்றனர். இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் அம்பேத்கார் பிரிவு 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 அன்று பகுஜன் சமாஜி கட்சியுடன் மீண்டும் இணைந்தது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேவிதாசு நாகர், சியா லால் நாகர், பிரிதம் சந்த் மற்றும் பல்வந்த் சிங் சுல்தான்பூர் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் மாநிலத் தலைவருமான நரேந்திர குமார் காசியப் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக இவரது பகுஜன் சமாஜ் அம்பேத்கார் பிரிவில் மீண்டும் இணைத்தனர். 2009 மக்களவைத் தேர்தலில், சுக்பீர் சிங் பாதல், தேவி தாசு நாகரை சந்தித்த பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி பாரதிய சனதா கட்சி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை அறிவித்தது.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Mohinder (2001). Punjab 2000: Political and Socio-economic Developments (in ஆங்கிலம்). Anamika Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186565902.
- ↑ "Activists hold protest over 'unkept' promises". The Tribune. 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
- ↑ "Valmiki morcha to 'liberate' shrine". The Tribune. 1999-04-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
- ↑ "Activists hold protest over 'unkept' promises". The Tribune. 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
- ↑ Service, Tribune News (15 October 2015). "BSP (Ambedkar) members take out motorcycle rally". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
- ↑ "BSP(A) to support the SAD-BJP candidates". News India, Asia, World, Sports, Business, Science / Tech, Health, Entertainment, Features. 10 May 2009. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.