தேவேந்திர பத்னாவிசு

தேவேந்திர கங்காதர பட்னவீஸ் (Devendra Gangadhar Fadnavis, , பிறப்பு 22 சூலை 1970) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.[1].பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சர் ஆவார்.[2] இவர் 30 சூன் 2022 அன்று முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[3][4]

தேவேந்திர கங்காதர பட்னவீஸ்
9வது மகாராட்டிர துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 சூன் 2022 (2022-06-30)
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர்ஏக்நாத் சிண்டே
முன்னையவர்அஜித் பவார்
17வது மகாராட்டிர முதலமைச்சர்
பதவியில்
23 நவம்பர் 2019 – 26 நவம்பர் 2019
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்உத்தவ் தாக்கரே
பதவியில்
31 அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ் பகத்சிங் கோசியாரி
முன்னையவர்பிரித்திவிராசு சவான்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
பதவியில்
1999–2002
முன்னையவர்வினோத் குடாதெ-பாட்டீல்
பின்னவர்சுதாகர் தேஷ்முக்
தொகுதிநாக்பூர் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூலை 1970
நாக்பூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அம்ருதா பட்னவீஸ்
பிள்ளைகள்திவிஜா பட்னவீஸ் (மகள்)
இணையத்தளம்www.devendrafadnavis.in

1990களில் இவரது அரசியல் வாழ்க்கைத் துவங்கியது; பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் மகாராட்டிரக் கிளையில் வார்டுத் தலைவராக துவங்கினார். தமது 21வது அகவையிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இலும் 1997இலும் தொடர்ந்து வெற்றி பெற்றி நகரமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.[5]

1997இல் தமது 27வது அகவையில் நாக்பூர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராட்டிர சட்டப் பேரவையில் 1999 முதல் நாக்பூரிலிருந்து சட்ட மன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]

இளமை வாழ்க்கை

தொகு

பத்னாவிசு நாக்பூரில் 1970இல் பிறந்தார். இவரது தந்தை, கங்காதர பத்னாவிசும் நாக்பூரிலிருந்து மகாராட்டிர சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். 1987இல் புற்றுநோயால் பத்னாவிசின் தந்தை உயிரிழந்தார். இவரது தாயார் சரிதா பத்னாவிசு அமராவதியின் கலோட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். விதர்பா வீட்டுக் கடன் சங்கத்தில் இயக்குநராகப் பணியாற்றினார். தந்தையின் காலடியைப் பின்பற்றி பத்னாவிசு இளம் வயதிலேயே இராட்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.

1986-87இல் தர்மபீத் கல்லூரியிலும் பின்னர் ஐந்தாண்டுகள் நாக்பூர் சட்டக் க்கலூரியிலும் கல்வி பெற்றார். 1986 முதல் 89 வரை அகில பாரத மாணவர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கினார். பெர்லினின் செருமன் பன்னாட்டு மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் (D. S. E.) வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பு பட்டமும் திட்ட மேலாண்மையில் பட்டயமும் பெற்றார்.[7]

குடும்ப வாழ்க்கை

தொகு

தேவேந்திர பத்னாவிசு மத்தியதர பழைமைவாத இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். 2006இல் அரசியல் பின்னணியில்லாத குடும்பத்தின் அம்ருதா இராணடேயை திருமணம் புரிந்தார். அம்ருதா நாக்பூரிலுள்ள ஆக்சிசு வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் திவிஜா என்ற மகள் பிறந்தார்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. https://www.ndtv.com/india-news/devendra-fadnavis-should-be-maharashtra-deputy-chief-minister-have-made-a-personal-request-to-him-bjp-chief-3115565
  2. http://timesofindia.indiatimes.com/home/specials/assembly-elections-2014/maharashtra-news/Devendra-Fadnavis-to-be-CM-next-week-no-deputy-CM-or-big-berths-for-Sena/articleshow/44904503.cms
  3. Eknath Shinde takes oath as Maharashtra chief minister, Devendra Fadnavis as deputy CM
  4. Eknath Shinde takes oath as Maharashtra CM, Devendra Fadnavis his deputy
  5. "Devendra Fadnavis elected BJP chief in Maharashtra". என்டிடிவி. 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  6. "Devendra Gangadharrao Fadnavis named Maharashtra BJP president". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 April 2013. http://timesofindia.indiatimes.com/india/Devendra-Gangadharrao-Fadnavis-named-Maharashtra-BJP-president/articleshow/19502681.cms. பார்த்த நாள்: 28 September 2014. 
  7. "Maharashtra's BJP chief is RSS-backed scholar who wants Vidarbha state". இந்தியன் எக்சுபிரசு. 12 April 2013. http://archive.indianexpress.com/news/maharashtras-bjp-chief-is-rssbacked-scholar-who-wants-vidarbha-state/1101101/. பார்த்த நாள்: 28 September 2014. 
  8. "Profile in detail". devendrafadnavis.in. Archived from the original on 3 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_பத்னாவிசு&oldid=3926665" இலிருந்து மீள்விக்கப்பட்டது