தொகுதி (உயிரியல்)
தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக் [note 1] கொண்ட முறை குறிப்பிடத்தக்கது ஆகும். அவற்றுள் தொகுதி (அல்லது கணம்) (ஆங்கிலம்: phylum, கிரேக்கம்: φῦλον) என்பதும், ஒரு அலகாகும். இவ்வலகு விலங்கியலில் மட்டும் பயன்படுத்தப் படும் அலகு ஆகும். தாவரவியலில் இவ்வலகுக்குச் சமமாக, பிரிவு (Devision) என்ற மற்றொரு அலகு பயன்படுத்தப்படுகிறது. தொகுதி என்ற சொல் பயன்படுத்தப் படுவதில்லை.
இதற்கு முன்னால் உயிரித்திணை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வகுப்பு என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் இல்லை. இந்த சொல் அமைப்பு முறை 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இலின்னேயசின் 5 அலகுகள். | தற்போதுள்ள 7 அலகுகள். |
---|---|
உயிரித்திணை | உயிரித்திணை |
****** | தொகுதி = பிரிவு [note 2] |
வகுப்பு | வகுப்பு |
வரிசை | வரிசை |
****** | குடும்பம் |
பேரினம் | பேரினம் |
இனம் | இனம் |