தொடர்புப் பொறியியல்

தொலைத் தொடர்புப் பொறியியல் (Telecommunications engineering) அல்லது தொடர்புப் பொறியியல் என்பது மின்பொறியியலையும் கணினிப் பொறியியலையும் சார்ந்த தொலைத்தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் பொறியியல் புலமாகும்.[1][2] இந்தப் பொறியியலின் பணி சுற்றதர் வடிவமைப்பு முதல் பெருந்திரல் வளர்ச்சிக்கான அடுக்கு செயல்நெறிமுறையை வகுப்பது வரை அமைகிறது. தொலைத்தொடர்புப் பொறியாளர் தொலைத்தொடர்புக் கருவிகளையும் ஏந்துகளையும் வடிவமைத்து, நிறுவி மேற்பார்வை செய்தலுக்குப் பொறுப்பாவார். இவ்வகை ஏந்துகளில் சிக்கலான மின்னனியல் நிலைமாற்ற அமைப்புகள், எளிய பழைய தொலைபேசி அமைப்புகள், கண்ணாடியிழை வடங்கள், IP வலையமைப்புகள், நுண்ணலைச் செலுத்த அமைப்புகள் ஆகியன அடங்கும். தொலைத் தொடர்புப் பொறியியல் ஒலிபரப்பு பொறியியலுடன் உறவுடைய பொறியியலாகும்.

தொலைத் தொடர்புப் பொறியாளர் 1942 ஜனவரியி இரண்டாம் உலகப்போரில் இலண்டன் மாநகரத் தொலைபேசி அமைப்பின் இயக்கத்தைப் பேணுதல்

தொலைத் தொடர்புப் பொறியியல் மின்னன் பொரியியல், குடிசார் பொறியியல், அமைப்புப் பொறியியல் ஆகிய துறைகள் இணைந்த பொறியியல் புலமாகும். அருதியாக, தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் உயர்வேகத் தகவல் செலுத்தப் பணிகளுக்குப் பொறுப்பாவர். இவர்கள் தொலைத்தொடர்பு வலையமைப்பு அக்கட்டமைப்புகளை வடிவமைக்கப் பல்வேறு கருவிகளையும் போக்குவரத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர்; மிகப் பரவலான தொலைத்தொடர்பு ஊடகங்களாக முறுக்கிய இணைகம்பிகள், அச்சொன்றிய வடங்கள், கண்ணாடி நாரிழை வடங்கள் ஆகியன அமைகின்றன. இவர்கள் கம்பியில்லாத் தொடர்பு முறைமைக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் பொறுப்பாவர். அதாவது கம்பியில்லாத் தொலைபேசி அமைப்புகள், வானொலி, செயற்கைக்கோள் தொடர்புகள், இணையம், தொலைக்காட்சித் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கும் பொறுப்பாவர்.

வரலாறு

தொகு

தகவல்தொடர்பியல் தகவலை பகிர்ந்துகொள்ளுவதில் மனிதனின் வாழ்வில் பெரும்பங்கு வகுக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் தம் கருத்தை தமது ஒத்த உயிரினத்திற்கு வெளிப்படுத்துகிறது. இதுவே தகவல் தொடர்பின் தொடக்க நிலையாகும். முந்தைய காலங்களில் மனிதன் தம் கருத்தினை சைகை மூலம் பிறர்க்கு அறிவித்தான். பின் ஓசைகள் மூலமாகவும், பின் படங்கள் மூலமாகவும் தம் கருத்தினை பிறர்க்கு அறிவித்தான். பின்னர் தகவல்களை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு புறாவினையும், ஒற்றர்களையும் பயன்படுத்தினான்.

பின்னர் செய்திகளை நீண்ட தொலைவிற்கு குறைந்த நேரத்தில் வேகமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு ஒலி, ஒளிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அயலவர் படையெடுப்பை மன்னனிடம் தெரிவிக்க ஊர் எல்லையிலேயே ஒரு குறிப்பிட்ட மரத்தை தீயிட்டு கொளுத்தி அறிவித்துள்ளனர். பின்பு இரும்புக் கோபுரங்களில் கம்பிகளை வெவ்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் அடுக்கி செய்திகளையும் தகவல்களையும் மிக விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். சில இடங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுகளின் மூலம் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

தொலைத்தொடர்பு அமைப்புகளைத் தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் வடிவமைக்கின்றனர், இத்தொழில்நுட்பம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொலைவரித் தொழில்நுட்ப மேம்பாடுகளாலும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கநிலை வானொலி, தொலைபேசி தொழில்துறை வளர்ச்சிகளாலும் தோன்றிய துறையாகும். இன்று தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி ஆகிய கருவிகளும் செயல்முறைகளும் உலகெங்கிலும் பொதுவழக்கில் உள்ள தொலைத்தொடர்பு ஏந்துகளாகும். இவற்ரைப் பல வலையமைப்புகள் இணைக்கின்றன. இவற்ரில், கணினி வலையமைப்புகள், பொது நிலைமாற்ரத் தொலைபேசி வலையமைப்புகள் (PSTN),[சான்று தேவை] வானொலி வலையமைப்புகள், தொலைக்காட்சி வலையமைப்புகள் ஆகியன அடங்கும்.இணைய வாயிலாக நடக்கும் கணினித் தொடர்புகள் பலவகைத் தொலைத்தொடர்பு அமைப்புகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இந்தத் தொழில்துறையின் வருவாய், தொகு உலகவிளைபொருளில் 3% ஆக அமைவதால், பொருளியலில் இது பெரும்பாத்திரம் வகிக்கிறது.[சான்று தேவை]

தகவல் தொடர்பு அடிப்படைக் கோட்பாடு

தொகு

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழையில்லாமல் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் செயலாகும். இந்த முறையில் ஒப்புமைத் தகவல் முதலில் இலக்கவியல் தகவலாக மாற்றப்படுகிறது. பின் பல வாயில்களிலிருந்து இதுபோல் வரும் இலக்கவியல் தகவல்கள் குறிமுறையேற்றப்படுகின்றன. பின்னர் அந்த தகவல்கள் கரவாக்கம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தகவல்கள் குறியேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் ஊடகம் அல்லது தகவல் ஊடகம் வழியாக சேரவேண்டிய இடத்திற்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தகவல்பிழை கண்டுபிடிக்கும் முறையும் அமைக்கப்பட்டு பிழைகள் திருத்தப்படுகின்றன. பெறும் அமைப்பு அனுப்பும் அமைப்புக்கு நேர் எதிரான செயல்முறைகளைச் செய்கிறது. குறியேற்றத்துக்குப் பதிலாக குறியிறக்கமும், கரவாக்கத்துகுப் பதிலாக வெளிப்படையாக்கமும், குறிமுறையேற்றத்துக்குப் பதிலாக குறிமுறையிறக்கமும் செய்கிறது. மேலும் இறுதியில் தேவையெனில் இலக்கவியல் குறிகைகளை ஒப்புமைக் குறிகைகளாகவும் மாற்றப்படுகிறது.

கருத்துருக்கள்

தொகு
 
வானொலி அலைபரப்பி அறை

தொலைத்தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகள்

தொகு

அலைசெலுத்தி

தொகு

அலைபரப்பி அல்லது அலைசெலுத்தி எனும் தகவல் வாயில், தகவலைப் பரப்ப முடிந்த குறிகையாக மாற்றுகிறது. மின்னணுவியலிலும் தொலைத்தொடர்புகளிலும் அலைபரப்பி என்பது ஒரு மின்னனியல் கருவியாகும். இது உணர்கம்பி வழியாக வானொலி அலைகளை உருவாக்குகிறது. இது ஒலிபரப்பலில் மட்டுமல்லாமல் வானொலித் தொடர்பைப் பயன்படுத்தும் கலப்பேசிகளிலும் பயன்படுகிறது,

 
செம்புக் கம்பிகள்

அலைபரப்பும் ஊடகம்

தொகு

குறிகை பரப்பும் ஊடகம் அலைபரப்பும் ஊடகம் எனப்ப்டுகிறது. எடுத்துகாட்டாக, ஒலிக்கான அலைபரப்பும் ஊடகமாக காற்று பயன்படுகிறது. ஆனால், நீர்மமோ திண்மமோ கூட ஒலி அலையைப் பரப்ப வல்லன. தொடர்பு ஊடகமாக பல ஊடகங்கள் பயன்படுகின்றன. மிகப் பொதுவான ஊடகங்களில் ஒன்றாக செம்புக் கம்பி பயன்படுகிறது. இது குறைந்த மிந்திறனில் குறிகைகளை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசெல்கிறது. மற்றொரு புறநிலை ஊடகமாக கண்ணாடி நாரிழை பயன்படுகிறது. இது மிகவும் நெடுந்தொலைவுத் தொஅர்புகளுக்கு அலைபரப்பும் ஊடகமாக உருவாகியது. கண்ணாடி நாரிழை மெல்லிய கண்ணாடிப் புரியாகும் இது ஒளியை தன்கம்பி வழியாக பரப்புகிறது.

ஒளி அலைகள், வானொலி அலைகள் போன்ற மின்காந்த அலைகளுக்குப் பொருள் ஊடகம் ஏதும் இல்லதபோது வெற்றிடமே அலைபரப்பு ஊடகமாக அமைகிறது.

அலைவாங்கி

தொகு

அலைவாங்கி எனும் தகவல் பெறுமிடம் குறிகையை வாங்கி தேவப்படும் தகவல் வடிவத்துக்கு மாற்றுகிறது. வானொலித் தொடர்புமுறையில, வானொலி அலைவாங்கி என்பது ஒரு மின்னனியல் கருவியாகௌம். இது உணர்கம்பிவழி வரும் வானொலி அலைகளை வாங்கி அவை தாங்கிவரும் தகவலைப் பிரித்து பயன்படும் வடிவில் மீட்கிறது. அலைவாங்கியின் தகவல் ஒலியாகவோ படமாகவோ காணொலியாகவோ இலக்கவியல் தரவுகளாகவோ அமையலாம்.[3]

 
கம்பியில்லா தொடர்புக் கோபுரம்

கம்பிவழித் தொடர்புமுறை

தொகு

கம்பிவழித் தொடர்பியலில் துத்தநாக கம்பிகள்,கண்ணாடி இழைகள்,திருக்கப்பட்ட இரட்டைக் கம்பிகள்,அலை கடத்திகள் ஆகியவற்றின் வழியாகத் தகவல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

கம்பிவழித் தொடர்புமுறைகள் புதைவடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறது; சிலவேளைகளில் மேனிலைக் கம்பித் தொடர்களைப் பயன்படுத்துகிறது, இவற்றின் இணைப்பு வடங்களில் குறிப்பிட்ட புள்ளிகளில் மின்னனியல் குறிகை மிகைப்பிகளும் முனையப் புள்ளியில் ஈற்றுக் கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.[4]

கம்பியில்லா தொடர்புமுறை

தொகு

கம்பியில்லா தொடர்புமுறையில் தகவல் கம்பிகளோ வடங்களோ அல்லது மின்கடத்திகளோ இல்லாமலே நெடுந்தொலைவுக்குப் பரப்பப்படுகிறது.[5] கம்பிவழித் தொடர்புமுறையில் இயலாத நெடுந்தொலைவு தொடர்புகள் கம்பியில்லா முறையில் அனுப்பமுடிகிறது. கம்பிகள் இன்றி வானொலி அலைகள் வழியாகவும் ஒலியாற்றல் வழியாகவும் அலைபரப்பிகளையும் அலைவாங்கிகளையும் தொலைவிடக் கட்டுபாடுகளையும் பயன்படுத்தித் தகவல் பரப்புதலை நிறைவேற்றும் தொடர்புமுறையே தொலைத்தொடர்புத் தொழில்துறையில் பயன்படுகிறது.[6] Information is transferred in this manner over both short and long distances.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. Burnham, Gerald O. (October 2001). "The First Telecommunications Engineering Program in the United States". Journal of Engineering Education (American Society for Engineering Education) 90 (4): 653–657. http://www.jee.org/2001/october/417.pdf. பார்த்த நாள்: செப்டம்பர் 22, 2012. 
  2. "Program criteria for telecommunications engineering technology or similarly named programs" (PDF). Criteria for accrediting engineering technology programs 2012–2013. ABET. October 2011. p. 23. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 22, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Radio Frequency, RF, Technology and Design, Radio Receiver Technology". Radio-Electronics.com. Archived from the original on 27 January 2012. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  4. "Wired Communications". The Great Soviet Encyclopedia (3rd ed.). The Gale Group, Inc. 1979 [First published 1970]. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  5. "What is wireless communication technology and its types". EngineersGarage. Archived from the original on 20 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "ATIS Telecom Glossary 2007". atis.org. Archived from the original on 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2008-03-16.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்புப்_பொறியியல்&oldid=3587288" இலிருந்து மீள்விக்கப்பட்டது