தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்

தொன் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி (Don Bosco Matriculation Higher Secondary School, Thanjavur), தஞ்சாவூரிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி ஆகும். இப்பள்ளி திருச்சியிலுள்ள சலேசிய மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்நிறுவனத்தில் ஒரு மழலையர் பள்ளி, ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பயிற்று மொழி ஆங்கிலம் மற்றும் இரண்டாம் மொழி தமிழ் ஆகும்.

தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி
முகவரி
யாகப்பா நகர்
தஞ்சாவூர், தமிழ் நாடு, 613007
இந்தியா
அமைவிடம்10°45′39″N 79°08′01″E / 10.760874°N 79.133727°E / 10.760874; 79.133727
தகவல்
வகைதனியார்
குறிக்கோள்"Love and Truth"
நிறுவல்1983
பள்ளி அவைமேல்நிலை
அதிபர்சகோ. இ. அமிர்தம்
தலைமை ஆசிரியர்திரு. பாலசுப்பிரமணியம்
பணிக்குழாம்54
ஆசிரியர் குழு48
தரங்கள்K-12
கற்பித்தல் மொழிஆங்கிலம்
வகுப்பறைகள்42

வரலாறு தொகு

அருட்தந்தை ஜார்ஜ் தொமாடிசின் தலைமையிலான தொன் போஸ்கோவின் சலேசியர்கள் 1906ஆம் ஆண்டு தஞ்சை வந்து சேர்ந்தனர்[1]. அவர்கள் ஒரு அனாதை இல்லத்திற்குப் பொறுப்பேற்றனர்[2]. பிறகு இளைஞர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தைத் தொடங்கினர். எனினும் 1928-ஆம் ஆண்டிற்குப் பிறகு தஞ்சையில் அவர்களால் தங்கள் பணியைத் தொடர முடியவில்லை. பிறகு, தங்கள் பணியைத் தொடர 1983-ஆம் ஆண்டு தஞ்சை திரும்பினர். 1983-84ஆம் ஆண்டில் இளைஞர்களுக்காக ஒரு பாடசாலையையும் 6 முதல் 10 நிலைகளைக் கொண்ட ஒரு உயர்நிலைப்பள்ளியையும் நிறுவினர். உயர்நிலைப்பள்ளி தமிழ் நாடு மெட்ரிகுலேஷன் அமைப்பைச் சார்ந்ததாகும். பின்னர் அவர்கள் 1985-86ஆம் ஆண்டில் புனித தோமினிக் சாவியோவின் பெயரால் ஒரு ஆரம்பப் பள்ளி நிறுவப்பட்டது. ஆரம்பப் பள்ளியில் 1வது மற்றும் 2வது நிலைகளுக்கு வகுப்புகள் நடைபெற்றன. 1987-ல் ஒரு புதிய கட்டிடத்தை அமைத்ததன் வழியாக இப்பள்ளி அதன் வளர்ச்சியைத் தொடர்ந்தது. 1994-95-ஆம் ஆண்டில் மேல்நிலைப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனவரி 24, 2008 அன்று இப்பள்ளி அதன் வெள்ளி விழாவை ஒரு மாபெரும் விழாவாகக் கொண்டாடியது.

நிர்வாகம் தொகு

இந்த நிறுவனம் முதலில் சென்னையிலுள்ள சலேசிய மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்தது. சலேசிய பணியின் விரிவாக்கதால் இப்பள்ளி திருச்சியிலுள்ள சலேசிய மாகாண நிர்வாகத்தின் கீழ் வந்தது. இங்குள்ள பாடசாலை முதன்மை நிர்வாகியின் தலைமையில் உள்ளது. பள்ளியின் நடவடிக்கைகள் முதல்வரால் நிர்வாகிக்கப்படுகின்றன. பள்ளி தொடங்கிய போது, போதனைகளை முற்றிலும் சலேசிய சகோதரர்கள் வழங்கினார். இப்பள்ளியின் ஆரம்ப காலத்தில் சலேசியர்களே பிரத்யேக நிர்வாகிகளாக இருந்தனர். பள்ளியிலுள்ள வகுப்பறைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது இந்நிறுவனம் உள்ளூரிலுள்ள தகுதியான ஆசிரியர்களை வேலையில் அமர்த்தியது. நிர்வாகக் கடமைகளும் மெதுவாக ஆசிரியர்களுக்கும் சலேசிய சகோதரர்களுக்கும் இடையே பகிர்ந்துக்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

  1. Joseph Thekkedath(2006). "SDB India - The First Hundred Years". Don Bosco India Centenary Souvenir, 33-48, Bosco Information Service, Don Bosco India. 2011-02-07 அன்று அணுகப்பட்டது..
  2. "A standing symbol left by a service-minded group". தி இந்து. 2006-02-05 இம் மூலத்தில் இருந்து 2006-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060525030825/http://www.hindu.com/2006/02/05/stories/2006020505490200.htm. பார்த்த நாள்: 2011-02-07. 

வெளி இணைப்புகள் தொகு