தொல்லியல் அருங்காட்சியகம், கரூர்

கரூர் தொல்லியல் அருங்காட்சியகம் என்பது கரூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இந்த தொல்லியல் அருங்காட்சியகம் 1982ல் தொடங்கப்பட்டது.

காட்சிப் பொருட்கள்தொகு

கரூர் பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 அகழ்வாராய்ச்சிகள் (1973, 1977, 1993) மேற்கொள்ளப்பட்டன. அவ்வாய்வின் போது கிடைத்த ரோமானியர், சங்ககாலச் சேரர், சோழர், பாண்டியர்களின் காசுகள், பல்லவர் காசுகள், பிற்காலப் பாண்டியர் காசுகள், ராசராசன் காசு, நாயக்கர் காசுகள், கி.மு. 5ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க தமிழக முத்திரைக் காசுகள், தங்க, வெள்ளி மோதிரங்கள் போன்றவை கிடைத்தன. [1][2] அவற்றுடன் இங்கு பனை ஒலைச்சுவடிகள், மணிகள், செப்புத் தட்டுகள், உருவாரங்கள், நடுகற்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மூலம்தொகு

  1. கரூர் அரசு அருங்காட்சியகம்
  2. Karur Govt, Museum ‘Museum on Wheels’ at Karur