தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர்

தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1984 ஆம் ஆண்டில் பிரித்தானியர் காலத்தைச் சேர்ந்த மருத்துவ நிலையம், சிறைச்சாலை என்பன இருந்த கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகக் கட்டிடம் நீள்சதுர வடிவான ஒரு பெரிய கூடத்தையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய அறையையும் கொண்டது. இவற்றுடன் கட்டிடத்தின் முன்பகுதியில் ஒன்றும் பின்பகுதியில் ஒன்றுமாக இரண்டு விறாந்தைகளும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் குவாலியரிலும் அதன் சுற்றாடலிலும் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு