தோக்ரா சட்டக் கல்லூரி
தோக்ரா சட்டக் கல்லூரி (Dogra Law College) இந்திய ஒன்றியப் பிரதேசமான சம்மு-காசுமீரில் உள்ள சம்முவில் உள்ள துக்கர் நிலத்தின் பாரி பிராமணாவில் அமைந்துள்ள ஒரு தனியார் சட்டப் பள்ளியாகும்.[1] இது 3 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல். எல். பி. படிப்புகளை வழங்குகிறது. இப்பட்டப் படிப்புகள் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) புது தில்லியால் அங்கீகரிக்கப்பட்டு சம்மு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு.
தொகு1999 ஆம் ஆண்டில் சம்மு-காசுமீர் அரசு இக்கல்லூரியை நிறுவ அனுமதித்தது. சம்மு பல்கலைக்கழகமும் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது. இறுதியாக 2000 ஆம் ஆண்டில், தோக்ரா சட்டக் கல்லூரி இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது.[3] ஒவ்வொரு தனிமனிதர் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான ஆளுமை வளர்ச்சியைப் பெறக்கூடிய ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஆறு ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dogra Law College, Jammu". Collegedunia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.
- ↑ "Jammu University: Dogra Law College". jammuuniversity.in. Archived from the original on 7 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.
- ↑ "About | Dogra Law College". dograeducationaltrust.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.