தோட்ட ஆந்தை

தோட்ட ஆந்தை (Garden owl) என்பது கொம்பு ஆந்தை ஒத்த ஒரு சோளக்காட்டுப் பொம்மை வடிவமாகும். இது பொதுவாக விவசாய மற்றும் நகர்ப்புற சூழல்களில் தீங்குயிரிகள், குறிப்பாகப் பறவைகள் அல்லது கொறித்துண்ணிகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

பொறி ஆந்தை.

தயாரிப்பும் வடிவமைப்பும்

தொகு

நவீனத் தோட்ட ஆந்தைகள் பொதுவாக நெகிழியினால் செய்யப்பட்ட அச்சுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இந்தத் தோட்ட ஆந்தைகளை உற்பத்தி செய்யப் பல நிலையங்கள் உள்ளன.[3] இந்த பொம்மைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுழலும் தலை, காற்றால் இயங்கும் இறக்கைகள் பெரும்பாலும் உயிருள்ள ஆந்தைகளின் நடத்தையைப் பிரதிபலிக்கவும், தோட்ட ஆந்தையின் தீங்குயிரிகளைத் தடுக்கும் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.[4][5] தோட்ட ஆந்தைக்குப் பல தொழில்நுட்ப புதுப்பிப்புகள் சூரிய சக்தி எந்திரம் பொருத்தப்பட்டும், அசைவூட்ட உணர்விகளுடனும், மறைக்கப்பட்ட புகைப்படக் கருவிகளுடனும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[6][7][8]

செயல்திறன்

தொகு

தோட்ட ஆந்தைகளின் பயன்பாடு காரணமாக தீங்குயிரிகளின் தாக்குதல் தற்காலிகமாகக் குறையலாம். ஆனால் காலப்போக்கில் இச்செயல்பாடு தன் செயல்திறனை படிப்படியாக இழக்க நேரிடும்.[9][10][11][12] நகர்த்துவது, ஒலிச் சேர்ப்பு, அல்லது சூழல் பிரதிபலிப்பு தோட்ட ஆந்தையின் செயல்திறனினை நீண்ட நாட்களுக்கு அதிகரிக்கும் முறைகளாகும்.[13]

வரலாறு

தொகு

வேட்டையாடும் தூண்டில் பொறி தோட்ட ஆந்தைகளின் ஆரம்ப முன்னோடியாகும். பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இருவரும் மூலோபாய வேட்டை நடைமுறைகளில் பறவைப் பொறிகளைப் பயன்படுத்தினர்.[14][15] 1400களிலிருந்து வேட்டைப் பொறிகள் பயன்படுத்தப்பட்டாலும், பயிர்களில் பறவைகளின் சேதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஐரோப்பியப் பதிவுகள் காட்டுகின்றன. தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்துவது பற்றிய புத்தகங்கள் 1600களில் எழுதப்பட்டன.[16] அமெரிக்க ஆந்தை பொறி 1900களிலிருந்து பால்சா மரம், பேப்பியர்-மாச் மற்றும் தோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. Cincinnati, University of. "Do Fake Owls and Other Decoys Work?". Treehugger (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  2. Woodstream, Woodstream. "What Keeps Birds Out of Your Yard". www.perkypet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  3. "Best Owl Decoys To Scare Birds Away". www.top5-usa.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  4. Dalen. "Natural Enemy Scarecrow® Rotating-Head Owl". Dalen (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  5. "Prowler Owl Deterrent Decoy". www.sportystoolshop.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  6. Dalen. "Natural Enemy Scarecrow® SOL-R Action Owl™". Dalen (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  7. Dalen. "TIGER OWL™ Motion-Sensing Natural Enemy Scarecrow®". Dalen (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  8. Dalen. "BIRD WATCHER™ Hidden Camera Surveillance Owl 360° Vision Sentry Seer". Dalen (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  9. Blackwell, Matthew (2020-09-18). "What Really Scares Birds Away? Expert Bird Control Tips | PMP Blog". Project Multi Pest (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  10. Rensel, Leah J (2012). "The Effects of Owl Decoys and Non-threatening Objects on Bird Feeding Behavior". Digital Commons at Linfield University. பார்க்கப்பட்ட நாள் September 14, 2024.
  11. Montevecchi, W. A.; MacCarone, A. D. (1987). "Differential Effects of a Great Horned Owl Decoy on the Behavior of Juvenile and Adult Gray Jays (Efecto de la Presencía de un Señuelo de Bubo virginianus en la Conducta de Adultos y Juveniles de Perisoreus canadensis)". Journal of Field Ornithology 58 (2): 148–151. பன்னாட்டுத் தர தொடர் எண்:0273-8570. https://www.jstor.org/stable/4513214. 
  12. Marsh, Rex. E (1992). "Scarecrows and predator models for frightening birds from specific areas" (PDF). eScholarship. பார்க்கப்பட்ட நாள் September 14, 2024.
  13. "How Does a Fake Owl Work to Scare Birds Away?". Sciencing (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  14. "Owl Decoy | Smithsonian American Art Museum". americanart.si.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  15. "Catching Birds with an Owl Decoy". Museum of Fine Arts, Budapest (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  16. Seamans, Thomas W. (2016). "Bird Dispersal Techniques" (PDF). USDA. பார்க்கப்பட்ட நாள் September 14, 2024.
  17. "Folk Art Carved and Painted Owl Decoy, USA, 1900's". 1stDibs.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்ட_ஆந்தை&oldid=4143987" இலிருந்து மீள்விக்கப்பட்டது