தோர்ஜி சோடன்

பூட்டானின் அரசியல்வாதி

ஓம் தோர்ஜி சோடன் (Dorji Choden) (பிறப்பு 5 திசம்பர் 1960) பூட்டானைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் 2013இல் பூடானின் பணிகள் மற்றும் மக்கள் குடியேற்ற அமைச்சகத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் பூடான் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.[1] [2]

கல்வி தொகு

இவர், பூட்டானில் தனது ஆரம்பகல்வியையும், உயர்நிலை பள்ளிப் படிப்பையும் கற்றார். பின்னர், மற்றும் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்திலுள்ளா ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்ப கழகத்தில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் அமெரிக்காவில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

அரசுப் பணி தொகு

சோடன், பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் மூலம் பூட்டானில் முதல் பெண் பொறியாளராக ஆனார். பின்னர் இவர் பூடானின் பொது சுகாதார பொறியியல் பிரிவின் தலைவராக பணியாற்றினார். சனவரி 2000இல் இவர் பூட்டானின் தரநிலை மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குநரானார். சனவரி 2006இல் இவர் அதே ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான பூட்டானின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இவர் அரசு சேவையில் இருந்த காலத்தில், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் தொழில்நுட்ப மற்றும் பாலின பிரச்சினைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2008இல் பூடான் முடியாட்சியாக இருந்து அரசியல்சட்ட முடியாட்சியாக மாறியது. பூடானின் முதல் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதற்காக, ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்து பதவி விலகினார். ஏனெனில் பூட்டான் அரசியலமைப்பு ஒரு அரசு ஊழியர் தேர்தலில் பங்கேற்க அனுமதிப்பதில்லி. தேர்தலில் போட்டியிட்ட இவர் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் 2009இல், இவர் ஐக்கிய நாடு அவையின் வறுமை ஒழிப்பு, புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் திட்டத்தின் உதவி உறைவிடப் பிரதிநிதியாக பணியாற்றத் தொடங்கினார். அங்கு இவர் வறுமை ஒழிப்பில் கவனம் செலுத்தினார். 2012 வரை இளைஞர் வேலைவாய்ப்பும் பெண்கள் அதிகாரமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.[4] [5]

அரசியல் வாழ்க்கை தொகு

2008ஆம் ஆண்டில், இவர் பூட்டானில் பதிவுசெய்யப்பட்ட முதல் அரசியல் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். திராஷிகாங்கில் உள்ள திரிம்ஷிங் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த போட்டியிட்டார். இத்தேர்தலிலிலும் தோல்வியைச் சந்தித்தார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தற்காலிகமாக அரசியலை விட்டு வெளியேறினார்.[6]

2012 இல், இவர் ஐ.நா.விலிருந்து விலகி, புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான திரக் நயம்ருப் சோக்பாவில் சேர்ந்து அதன் தலைவரானார். இதன் மூலம், திரூக் சிர்வாங் சோக்பாவின் தலைவர் லில்லி வாங்சுக்குடன் சேர்ந்து பூட்டானில் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்திய முதல் பெண்களில் ஒருவராக ஆனார். 31 மே 2013 முதன்மைத் தேர்தலில், இவர் தனது தொகுதியில் வெற்றியைப் பெற்றார். ஆனால் இவரது கட்சி வெற்றிபெறவில்லை. பொதுத் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், திரூக் புவென்சாம் சோக்பா ஆகிய கட்சிகள் மட்டுமே முதன்மைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை வென்றது.[7]

அந்த நேரத்தில், அவர்கள் அழைப்பின் பேரில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். இருப்பினும், பூட்டானின் அரசமைப்புச் சட்டம் கூட்டணி அரசு அமைவதை அனுமதிக்கவில்லை. மேலும், மேலும் இவர் தேர்தலுக்கு முன்னரே மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[8] [9] விமர்சனங்கள் இருந்தபோதிலும், இவர் மக்கள் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 13 சூலை 2013 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். கட்சி இவருக்கு பணிகள் மற்றும் மக்கள் குடியேற்ற அமைச்சகத்தை வழங்கி, பூடானில் முதல் பெண் அமைச்சராக்கியது.

சர்ச்சை தொகு

பூட்டானில் பாலின பாகுபாடு குறித்து ஊடகங்களில் இவர் அறிக்கை வெளியிட்ட பிறகு சர்ச்சையை எதிர்கொண்டார்.[10] ஒரு விமர்சகர் வலைத்தளத்தில் இவரது அறிக்கையை விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்.[11] அமைச்சராக தனது துறையுடன், பூடானின் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆணையத்தின் தலைவராகவும், பூடான் கல்வி நகரத்தின் தலைவராகவும் உள்ளார். [12]

மேற்கோள்கள் தொகு

  1. "Ministry of Works and Human Settlement". Royal Government of Bhutan. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  2. "Who is Who". http://www.bbs.bt/news/?p=29800. பார்த்த நாள்: 5 May 2014. 
  3. Dahal, Rabi (2013-07-25). "Bhutan gets first woman minister". Bhutan Observer இம் மூலத்தில் இருந்து 2014-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502184152/http://bhutanobserver.bt/7523-bo-news-about-bhutan_gets_first_woman_minister.aspx. பார்த்த நாள்: 3 May 2014. 
  4. Maxwell. "Office of Alumni Relations". Maxwell. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  5. Prajatrantric, Suraaj (2013-04-21). "Who is Aum Dorji Choden". Bhutan and Democracy. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  6. "PDP's 2013 Cabinet Ministers". Bhutan Majestic Travel. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  7. "DEMKHONG WISE RESULT". Election Commission of Bhutan. Archived from the original on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  8. "Dorji Choden is now showing her true colour". Kuensel forum. http://www.kuenselonline.com/forums/topic/dorji-choden-is-now-showing-her-true-colour/. பார்த்த நாள்: 6 May 2014. 
  9. Lamsang, Tenzing (8 June 2013). "Eight DNT Candidates From The East Including The President And Vice President Agree To Join PDP". The Bhutanese. http://www.thebhutanese.bt/eight-dnt-candidates-from-the-east-including-the-president-and-vice-president-agree-to-join-pdp/. பார்த்த நாள்: 6 May 2014. 
  10. "Discrimination in the trappings of power". http://www.kuenselonline.com/discrimination-in-the-trappings-of-power/#.U2fIuvmSxqU. பார்த்த நாள்: 5 May 2014. 
  11. Sonamla. "What a girl wants". Bhutanomics. Archived from the original on 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  12. "Works at Education City site Stopped" இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505200452/http://www.southasianmedia.net/stories/bhutan/english-language-media/works-at-education-city-site-stopped-story. பார்த்த நாள்: 5 May 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்ஜி_சோடன்&oldid=3559765" இலிருந்து மீள்விக்கப்பட்டது