தோலக்கின் பாடல்கள்

ஹைதராபாத் மாநில பெண்களால் பாடப்படும் உருது நாட்டுப்புறப் பாடல் வகை

தோலக்கின் பாடல்கள் என்பது ஹைதராபாத் தக்காணத்தில் தினசரி வழக்கமான வேலைகளின் போதும் அல்லது திருமண விழாக்களின் போதும் ஹைதராபாத் மாநில பெண்களால் பாடப்படும் உருது நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும் . நாட்டுப்புற பாடல்கள் "லோக் கீத்" என்றும் அழைக்கப்படுகின்றன, கீத் என்றால் தமிழில் பாடல்கள் என்று அர்த்தமாகும். மேலும் இப்பாடல்கள் பெண்கள் ஆலைகளில் தானியங்களை அரைக்கும் போது பாடப்பட்டதால், அவை சக்கி கே கீத் ( சக்கி - மில் மற்றும் கீத் -பாடல்கள்) என்ற பெயரிலும் அழைக்கப்படும். நவீன நாட்களில் தோலக்கின் பாடல்கள் எனப்படும் இப்பாடல்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் சடங்குகளின் போதும், குழந்தை பிறந்தவுடன் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் பாடப்படுகின்றன, [1] [2]

தோல் என்பது தோலக்கின் பாடல்கள் பாட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி

வரலாறு தொகு

கலாச்சார புகழ்ச்சி தொகு

தோலக்கின் பாடல்கள் எனப்படும் இப்பாடல்கள் ஹைதராபாத் பிராந்தியத்தில் ஐந்து நாட்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டங்களில் பாடப்படும் கொண்டாட்டப் பாடல்களாகும். [3]

இசைக்கருவி தொகு

தலைப்பில் சொல்லப்பட்டது போல, வகைப் பாடல்கள் பாடப்படும் போது, தோலக் இசைக்கருவியே மட்டுமே பயன்படுத்துவர். பெண்கள் குழுவாக அமர்ந்து கொண்டு, ஒருவர் தோலக் வாசிக்க, மற்றவர்கள் இணைந்து பாடல்களை பாடுவதே இப்பாடல் முறையாகும்.தோலக்கின் தாளம் அப்பெண்களுக்கு ஓசை லயம், தொடர்ந்து பாடுவதற்கு ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியின் சாரத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. K Gupta, Harsh; Parasher Sen, Aloka; Balasubramanian, Dorairajan (2000). Deccan Heritage. Universities Press. பக். 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7371-285-2. 
  2. Khan, Asif Yar. "A taste of the Hyderabadi culture". 
  3. Aspects of Culture & Society: Muslim Women in India. Women's Research and Action Group. 1997. p. 177. https://books.google.com/books?id=CEy3AAAAIAAJ. பார்த்த நாள்: 29 October 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலக்கின்_பாடல்கள்&oldid=3657827" இலிருந்து மீள்விக்கப்பட்டது